|
![]() |
ச்சாவோ சொங்திங்
ச்சாவோ சொங்திங் 1924இல் ஜெஜியாங் மாகாணத்தில் துங்யாங் என்ற ஊரில் பிறந்தார். இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்தே இசையில் நாட்டம் கொண்டிருந்தார். ஒன்பதாவது வயதில் மூங்கில் புல்லாங்குழலை இசைப்பதற்கு கற்கத்தொடங்கினார். அர்கு பீடில், யாழ், மூன்று நாண் இசைக்கருவி போன்ற தேசிய இசைக்கருவிகளை இசைக்கக் கற்றார். இவர் 16 வயதான போது உயர் நிலைப் பள்ளியில் பட்டதாரியாகியதுடன் குன்ச்சு இசை நாடகத்துக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். பின்னர் இவர் ஒரு லிபரல் கலைக்கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்ற பின்னர் உயர் பாடசாலையில் ஒரு இசை ஆசிரியராக சேர்ந்தார். 22 வயதில் இவர் தந்தையின் வேண்டு கோளின் காரணமாக, தமக்குவிருப்பமான இசைத் தொழிலை விட்டு ஷாங்கை சட்டப்பள்ளியில் சட்டம் கற்றார்.
1949 ச்சாவோ திடமான நோக்கத்துடன் சட்டக் கல்வியை முடித்து, தேர்வு எழுதிய பிறகு, கலைக் குழுக்களுடன் இணைந்தார். இவர் பலவகையான மேற்கத்திய இசைக் கருவிகளை இசைப்பதற்கும், பாடல்களை இயற்றவும் கற்றார். 1956இல் "காலை" என அழைக்கப்பட்ட ஒரு புல்லாங்குழல் தனிநிகழ்ச்சியை தயாரித்தார். இது தேசிய இசை வாரத்தின் முதலாவது அமர்வில் இசைக்கப்பட்டு, பெரிய வெற்றியை அடைந்தது. 1964இல் "ஷாங்காய் வசந்த காலம்" கச்சேரியின் ஐந்தாவது அமர்வில் இவருடைய இசை மெட்டுக்களில் இரண்டு பாடப்பட்டு அவை பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றன. இசை வல்லுனர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் வென்றது.
அதன் பின்பு ச்சாவோ புல்லாங்குழலின் தொழில் நுட்பம் சார்ந்த கல்விக்குத் திரும்பினார். இவருடைய தம்பியும், மருத்துவருமான 2 ச்சாவோ சொங்லிங்கின் உதவியுடன் இவர் இறுதியாக புல்லாங்குழல் தயாரிப்புக்கான விஞ்ஞான முறைப்படியான நுட்பங்களை ஆராய்ந்தார்.
ச்சாவோ கற்பித்தலில் பெரிய சாதனைகளைச் செய்ததுடன் இவருடைய மாணவர்களில் பலர் உற்றாட்டிலும், வெளிநாடுகளிலும் உயர் புகழைப் பெற்றனர். மேலும் ச்சாவோ இரண்டு பரிசோதனைகளைச் செய்தார். இதில் ஒன்று வளைத்த புல்லாங்குழல் இசைப்பதை பாதிக்காமல் நீட்டப்படக்கூடிய புல்லாங்குழலாக இது இருந்தது.
மற்றையது "இணைப் புல்லாங்குழல்" இது "காட்டு வாத்துப் புல்லாங்குழல்" எனவும் அழைக்கப்பட்டது. இந்த வகையான அழகான புல்லாங்குழல் சுவர் ஓவியங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.
காலப்பண்பை சிறப்பாக வெளிப்படுத்த தென்வகை மற்றும் வடக்குவகை இசைப்பண்களைப் புரிந்து கொண்டு, மேற்கத்திய புல்லாங்குழலிலும் சிறப்பாகக் கற்றார். இவர் இறுதியாக ஓங்கியும், மென்மையாகவும் ஒலிக்கும் இரு பாணிகளையும் உடைய "ஜெஜியாங் இசைவகையை" உருவாக்கினார். ச்சாவோவின் புல்லாங்குழல் கலையானது பாடுதல், தொகுத்தல், கற்பித்தல், ஆய்வு மற்றும் தயாரிப்பு போன்றவற்றை உள்ளடக்குகின்ற இவருடைய சொந்தப் பாணியின் ஒரு முறை மையாக இருந்தது.
அழகியல் நோக்கில், இசையை வழங்கும் முறையும், இசைக்கும் நுட்பமும் இணைய வேண்டும் என்றார்.
ச்சாவோ ஒரு போதும் இசைப் பள்ளிகளுக்கு சென்றதில்லை என்ற போதிலும், இவர் இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் போன்றவற்றில் முழுமையான அறிவு பெற்றுத் திகழ்ந்தார். எனவே இவருடைய கற்பித்தல் முறைமையானது எளிமையானதாக, கவனமாக அமைக்கப்பட்டதாக இருந்தது. இவருடைய பல மாணவர்கள் வெற்றிகளை அடைந்தார்கள்.
ச்சாவோ கடினமாக உழைத்து தமது வாழ்நாள் முழுவதும் இசைக்காக அர்ப்பணித்து, 2001இல் ஹங்ஜோஉவில் காலமானார்.
[மகிழுங்கள்]: 《வசந்தத்தில் மலர்க்காடு》
|