• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]

லியு மிங் யுவன்

லியு மிங் யுவன் கடந்த 50 வருடங்களாக சிறந்த சீனப் பாரம்பரிய இசைக் கருவி வாசிப்பவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் "சீன நரம்பு இசையின் பேரரசர்" எனப் போற்றப்படுகிறார். இவர் பன்ஹு, காஹு, அர்கு, ஜோங்ஹு, ஜிங்ஹு, சூயிஹு போன்ற நரம்பு இசைக் கருவிகள் மீட்டுவதில் திறமையுள்ளவர் லியு மிங்யுவன் சிறப்பாக பன்ஹு மற்றும் ஜோங்ஹு இசைப்பதில் வல்லவர். இவருடைய நிகழ்ச்சிகள் மிகவும் திறன் வாய்ந்ததாகவும் சரளமானதாகவும், இருப்பதுடன் இவருடைய பாணி தாராளமானதாகவும் நேர்த்தியானதாகவும் இருக்கின்றது. உள்நாட்டு இசைக்கும் இசைப் பாணிக்குமான இவருடைய மனோசக்தி காரணமாக இவருடன் எவரையும் ஒப்பிட முடியாது.

லியு மிங்யுவன் 1931இல் தியன்ஜினில் பிறந்து ஆறு வயதான போது தன்னுடைய தந்தையுடன் ஜிங்ஹு மற்றும் பன்ஹு இசைக்கத் தொடங்கினார். ஐந்து வருடங்கள் படித்த பின்னர் இவர் லாவ்ராக் வாத்தியக் குழு மற்றும் ப்புஜியன் குவாங்தொங் கூடல் மண்டபம் போன்றவற்றில் இணைந்தார். இவர் ஸ்சு சு இசை, குவாங் தொங் இசை, பெய்ஜிங் ஒபரா, ஷன்சியில் இருந்து பிங் ஒபரா மற்றும் ஹெபெய் மங்சி போன்ற பல இசை பாணிகளை கற்றுள்ளார். இவர் சில கூட்டிசைகள் மற்றும் பிங் ஒபெரா குழுக்கள் போன்றவற்றில் ஒரு வாசிப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். 1957இல் இவர் ஆறாவது இளைஞர் விழாவில் நாட்டார் இசைக் கருவிகள் வாசித்தல் போட்டியில் பங்கு பெற்று தங்க விருதை வென்றார். ஆரம்ப கால 30 வருட படிப்பு லியுவின் குன்ச்சின் நிபுணத்துவத்தின் மேலதிக வளர்ச்சிக்கான ஒரு நல்ல தளமாக அமைந்தது. இது பெரிய வெற்றிகளைத் தந்தது.

அர்கு வாசிக்கும் காலப்பகுதியில் லியு வேறுபட்ட பாணியுடன் உள்நாட்டு இசை நாடக குழுக்களுடன் சேர்ந்து செயல்பட்ட போது, ஒரு நேர்த்தியாகவும், ஜாக்கிரதையாகவும் வெளிப்படுத்தும் திறனை உருவாக்கினார். அர்குவுடன் இவர் பியானோ வாசிப்பதிலும் திறமையடைந்திருந்தார். இவர் மங்கோலியர்களின் கீதங்களையும் பாணியையும் கூடக்கற்றார்.

லியு மிங்யுவன் இனப் பாணி மற்றும் வசீகர முறைகளை தெளிவாகக் காட்டுகின்க உருவாக்கம், இணைப்பு மற்றும் இசை மீட்டல் உள்ளிட்ட பல படைப்புக்களைக் கொண்டிருக்கிறார். இவைகளுக்கு இடையில் பிரபலமான படைப்புக்களாக விழா, ஒரு மகிழ்ச்சியான வருடம், புல்நிலம், ஆயர்கள் கறுப்பர்கள் ஆகியன உள்ளன.

மேலும் லியு மிங்யுவன் நரம்பு வாத்திய வகை மற்றும் கற்பித்தலின் சீரமைப்புக்கு ஒரு பெரிய பங்களிப்பு செய்தார். இவர் வெற்றிகரமாக புதிய பாணியில் உள்ள பன்ஹு மற்றும் மைய பன்கு போன்றவற்றை உருவாக்கி அவற்றை பண்டைய பக்கவாத்தியக் கருவி என்பதில் இருந்து வளர்த்தெடுத்து தனியாக கச்சேரி செய்வதற்கு உருவாக்கினார். 1950களில் இருந்து லியு மிங்யுவன் இசை நுட்பங்கள் பயிற்சியில் புது முயற்சி செய்வதற்குத் தொடங்கினார். லியு மிங்யுவன் சீனப் பாதுகாப்பு மையத்தின் நரம்பு இசைத் துறைப் பேராசிரியராக வந்து 1996ல் இறக்கும் வரை ஆயிரம் வகை இசை நுட்பங்களைக் கற்பித்தார்.

[மகிழுங்கள்]: 《மகிழ்ச்சியான வருடம்》

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040