• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]

லியு தெஹை

லியு தெஹை 1950களின் இறுதியில் வளர்ச்சியடைந்த ஒரு திறமையான யாழ்இசைக் கலைஞர். இவர் யாழ்விற்பன்னர் எனவும், தேசியக் கருவூலம் எனவும் அழைக்கப்பட்டார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரும் புகழ் பெற்றார்.

லியு 1937இல் ஷாங்காயில் பிறந்தார். இவருடைய பூர்வீக வீடு ஹெபெய் மாகாணத்தில் சங் நிர்வாகப்பிரிவில் இருக்கின்றது. லியு உயர் பாடசாலையில் இருந்து நாட்டார் இசையில் ஆர்வத்தை வெளிப்படுத்தியதோடு சிறந்த இசைத் திறமை காட்டினார். 1950இல் இவர் 13 வயதாக இருந்த போது அர்கு பிடில் மற்றும் மூங்கில் புல்லாங்குழல் போன்ற கருவிகளை இசைப்பதற்குக் கற்கத் தொடங்கினார். இவர் ஷாங்காய் ஒலிபரப்பு நிலையத்தின் நாட்டார் இசையின் கலைக்குழுவிலும் இணைந்தார்.

1957இல் இசைப் பாதுகாப்பு மையத்தால் சேர்த்துக் கொள்ளப்பட்டு யாழ் இசை மீட்டலில் சிறப்பு நிலை அடைந்தார்.

லியுவின் இசை மீட்டலில் பண்புகள் தூய்மையான, அழகான ஒலியும், தேர்ச்சியான திறமையும், அதிநவீன பாணியும் சேர்ந்து ரசிகர்களை வியக்க வைத்தது. இவர் வெவ்வேறு பாரம்பரிய நடைகளை மரபுவழி பெற்று புரிந்து கொண்டதோடு, புதிய கருத்துக்களையும் புகுத்தினார்.

லியு பழைய பாடல்களில் இருந்து நவீன பாடல்கள் வரை விரிவான சுருதிவீச்சில் பாடும் திறன் பெற்றுள்ளார். இவர் இசையைப் பிரபலப்படுத்திட, லியுயன் நதி, தயவு செய்து தங்கி இருங்கள், தூர விருந்தினர்கள், கொரில்லா பாடல்கள் மற்றும் மலன் மலர் மலர்கிறது போன்ற பல பாடல்களை யாழ் தனி இசையாக மாற்றினார். இவர் வெற்றி வீரனின் ஓய்வுக்காலம், சென் சுய் மற்றும் சுன்யன்னின் நிலா இரவு போன்ற சில பண்டைய யாழ் சுருதிகளை புதுப்பித்தார்.

மேலும் லியு பல தத்துவார்த்த யாழ் சுருதிகளைத் தொகுத்தார். இவை "வாழ்க்கை அத்தியாயம்…அன்னம், வயதான குழந்தை போன்றவை. "விவசாய நில அத்தியாயத்தில்" … பிறப்பிடத்திற்கு ஒரு பயணம், ஒற்றை விரல் சென், ஏனையவை, சமய அத்தியாயம்… த்தி சுய் வான்-இன், சந்தோஷ அர்ஹட் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இவருடைய கலைப்படைப்புக்கள், தொகுத்தலில் புதுமையான கருத்துக்களைச் சேர்த்து இனிமையான சாதனைகளை உருவாக்கின.

1978 தொடக்கம் 1981 வரையான கால கட்டத்தில் போஸ்ட்டன் இன்னிசை வாத்தியக் குழு, மேற்கு பெர்லின் இன்னிசை வாத்தியக் குழு, பிரபல நடிப்புப் பேச்சாளர் செய்ஜி ஒசாவா போன்ற வர்களுடன் லியு கூட்டுறவை ஏற்படுத்தினார். இவர் பெய்ஜிங், அமெரிக்கா, பிராங்பர்ட் போன்ற இடங்களில் புல்வெளிச் சகோதரிகள் எனும் யாழ் இசைக்கச்சேரி நிகழ்த்தினார். இது மேற்கு-கிழக்கு கலப்பிசையாக சிறந்து விளங்கியது. இந்த இசை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பை பெற்றது.

தற்போது லியு சீன இசைப்பாதுகாப்பு மையத்தில் ஒரு பேராசிரியராக இருப்பதோடு சீன இசைவாணர்கள் சங்கத்தின் சபை உறுப்பினராகவும், கலை மற்றும் அரங்கக் கலை கவுன்சிலின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். ஒரு மதிப்பு நிறைந்த இசையாளனாக இவர் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் விரிவுரைகளை வழங்குவதற்கும் சென்றுள்ளார். சமமுக்கியத்துவம் வாய்ந்ததாக இவர் இன்னிசை வாத்தியக் கோஷ்டிக்குள் யாழை ஒருங்கிணைப்பதற்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச கலாச்சார பரிமாற்றத்துக்கும் பெரும் பங்களிப்புக்களைச் செய்தார்.

[மகிழுங்கள்]: 《எல்லாப் பக்கங்களிலிருந்து திடீர்த்தாக்குதல்》

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040