• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வாத்தியக் கலைஞர்கள்]

ஷெங் ஜொங்குஒ

சீன வயலின் கலைஞரான ஷெங் ஜொங்குஒ இசைத் துறையில் தலைவர்களின் பாராட்டைப் பெற்றவர். அவர்கள் இவரை ஒரு சிறந்த இசை வல்லுனர் என்றும் சீனாவில் அதிகம் வசீகரமான வயலின் வாசிப்பவர் என்றும் போற்றுகிறார்கள்.

இவர் தேசிய இன்னிசை வாத்தியக் குழுவின் தனி இசைக் கலைஞர். ஷெங் ஜொங்குஒ சர்வதேச அரங்கில் சீனாவுக்காக உயர்ந்த கெளரவத்தை ஈட்டியவர். ஷெங் ஜொங்குஓ ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஷெங் கியு ஒரு வயலின் பேராசிரியராகவும், தாயார் சூ விங் ஒரு பாடகியாகவும் இருந்தனர். இவர்கள் பெற்றெடுத்த பதினொரு குழந்தைகளில் பத்துப் பேர் இசையில் சிறப்புப் பெற்றுள்ளதோடு, ஒன்பது பேர் வயலின் வாசிக்கிறார்கள். 1941இல் ஷெங் ஜொங்குஒ இந்தக் குடும்பத்தின் முதல் குழந்தையாக பிறந்தார். அந்தக்கால கட்டத்தில், ஒவ்வொரு சீன மக்களையும் போல் வெங்கின் தந்தையார், சீனா பலமானதாக இருக்கும், வெற்றி மேல் வெற்றியடைவதுடன் மற்றவர்களுக்கு பணிந்து இருக்காது என திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். இதனால் இவர் தனது மகனுக்கு செழுமையான சீனா என நேரான அர்த்தம் கொடுக்கும் ஷெங் கொங்குஒ என்ற பெயரிட்டார். ஷெங் ஜொங்குஓ ஐந்து வயதில் தொடங்கி தனது தந்தையாரிடம் வயலின் படித்ததுடன், அடுத்து இரண்டு வருடங்களில் இவர் முதல் தடவையாக அரங்கேறினார். இவருடைய ஒன்பதாவது பிறந்த தினத்தில் ஊ ஹன் வானொலி ஜெங் ஜொங்குஒ பதிவு செய்த நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. அது கேட்பவர்களை வசியப்படுத்தி அவர்கள் இவரை "திறமை படைத்த வயலின் பையன்" என அழைத்தனர். 1956இல் மொசார்ட்டின் 200வது பிறந்த தினக் கொண்டாட்டக் கச்சேரியில் ஜெங் ஜொங்குஒ மத்திய இன்னிசை வாத்தியக் குழுவுடன் மொசார்ட்டின் படைப்பை இசைப்பதில் வெற்றியடைந்தார். அதே வருடத்தில் இவர் தேசிய இசை வாரத்தில் பங்கு பெற்றார். இக்காட்சியில் இவர் மத்திய இசைப் பாதுகாப்பு மையத்துடன் வயலில் வாசித்தார். இதில் இவர் மா சிசொங்கின் படைப்பை இசைத்தார். இவர் விரைவில் இசைத் துறையில் பலரின் பாராட்டைப் பெற்றார்.

1960இல் ஜெங் ஜொங்குஒ மாஸ்கோவில் சைகோவ்ஸ்கி இசைப் பாதுகாப்பு மையத்தில் மேற்படிப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு இவர் உலகப் புகழ் பெற்ற வயலின் கலைஞரான லியோனித் கோஹன் என்பவரிடம் கற்றார். அங்கே இவர் சைகோவ்ஸ்கியில் நடைபெற்ற சர்வதேச வயலின் போட்டியில் கலந்து கொண்டு கெளரவப் பரிசைப் பெற்றார். இதன் விளைவாக இவர் நவ சீனாவின் உலக வாசிள் இசைப் போட்டியில் பரிசில்களைப் பெறுவதற்கு ஆரம்பகால வயலின் வாசிப்பவர்களில் ஒருவராக வந்தார். 1963இல் இவர் சீன வயலின் வாசித்தல் வரலாற்றில் இவ்வகையான முதலாவது கச்சேரி எனக் கருதப்படுகின்ற ஒரு கச்சேரியை ஷாங்ஹாய் இன்னிசை வாத்தியக் குழுவுடன் சேர்ந்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

1964இல் சீனாவுக்குத் திரும்பிய ஜெஜொங்குஒ உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஊக்கமாகத் தொடர்ந்து செயல்பட்டார். கலாச்சார புரட்சியின் காலப்பகுதியில் இவர் எந்தக் கச்சேரிகளையும் நடத்த முடியவில்லை ஆயினும் இவர் ஒருபோதும் இசையைத் தொடர்வதை நிறுத்தவில்லை. 1976க்கு பின்னர் இவர் இழந்த ஆண்டுகளை ஈடுசெய்ய வியப்பூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டார். இவர் ஒவ்வொரு வருடமும் உலகம் பூராக 100க்கும் அதிகமான கச்சேரிகளை நடத்தினார். இவ்வாறு இவர் இவருடைய காலத்தின் அதிக பிரபலமான இசைவாசிப்பவர்களில் ஒருவராக வந்தார்.

1980களில் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவில் ஆறு நகரங்களில் 12 கச்சேரிகளை நடத்தினார். இந்தக் காட்சி ஆஸ்திரேலிய-சீனக் கலாச்சாரத் தொடர்பில் ஒரு மைல்கல்லாக இருந்து முழு ஆஸ்திரேலியாவையும் கலக்கியது.

1987இல் இருந்து ஜெங்ஜொங்குஒ ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் இசை நிகழ்ச்சிகளை மேடையேற்றினார். இவர் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ உதவிக்காக சிறிதளவு பணத்தினை அன்பளிப்புச் செய்ய முடிந்தது. ஜப்பானிய அரசாங்கம் இவருக்கு "கலாச்சாரத்தூதுவர்" எனப் பட்டம் வழங்கியது. சீன-ஜப்பானிய கலாச்சாரத் தொடர்பில் இவருடைய பெயர் நிலைத்து நிற்கும் சிறந்த பங்களிப்புக் காரணமாக ஜப்பான் அரசாங்கம் இவரை "நிரந்தர அலுவல்கள் அமைச்சர்" எனப் பெயரிட்டது.

ஜெங்ஜொங்குஒ வெளிநாடுகளுடன் பல வயலின் வாசிப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார். இவருடைய அரங்கேற்றங்கள் உலக கலாச்சாரத் தொடர்புகளை மேம்படுத்த அளப்பரிய பங்களிப்பினை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் இவர் அடிக்கடி சீனப் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி ஒரு சீன இசை கொழிலின் மூன்னேற்றகரமான அபிவிருத்திக்கு ஒரு வரவேற்கத்தக்க பங்கினை வகித்தார்.

தற்போது இவர் தேசிய சபையின் ஆணையாளர், ஜனநாயக ஒத்துழைப்பு ஆணையாளர், சீன இசைவாணர்கள் சங்க இயக்குனர், சீன இன்னிசை மேம்பாட்டு மைய இயக்குனர் மற்றும் செயல் முறை கலைகள் சபை. ஆணையாளர் போன்ற பதவிகளை வைத்திருக்கின்றார்.

[மகிழுங்கள்]: 《நாடோடிப் பாடல்》

1 2 3 4 5 6 7 8 9 10
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040