• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கதை:நான்கு கற்சிங்கங்கள்
  2013-02-01 15:19:32  cri எழுத்தின் அளவு:  A A A   

நாட்கள் உருண்டோட, மீண்டும் ஒருமுறை மக்களின் அழுகுரல் அரச மாளிகையை எட்டியது. எரிச்சலும் கோபமும் கொண்ட பேரரசன் தன் அண்ணகனை அழைத்து, விசாரித்து வர பணித்தான். தியென்னான்மன் வாயில் வழியே வெளியே வந்த அண்ணகன் அழுகை வரும் திசையை நோக்கியபோது, கூரையின் முகடுகளில் இருந்த அலங்கார விலங்குகள்தான் அழுகின்றன, அதனால்தான் அழுகையொலி கேட்கிறது என்று தெரிந்துகொண்டான். மக்களின் இன்னல் நிலையைக் கண்டு, அவர்களின் துயரத்தை உனர்ந்துகொண்ட அந்த விலங்குகளும் சோகமடைந்து அழத்தொடங்கின. அந்த நாளில் இந்த வாயிலின் கோபுரம் 33 மீட்டர் உயரத்தில், 36 சாளரங்களும், கதவுகளும் கொண்டதாக அமைந்திருந்தது. முக்கிய முகட்டிலும், நான்கு ஆதரவு முகடுகளிலும், ஆந்தை போன்ற பறவை ஒன்று, ஒரு டிராகன், ஒரு ஃபீனிக்ஸ் ஒரு பறவை, ஒரு சிங்கம், வான் குதிரை ஒன்று, கடல் குதிரை ஒன்று, ஒரு மீன், சியே மற்றும் ஷென் என்ற இரு மாய விலங்குகள் என அலங்கார விலங்குகள் அமைந்திருந்தன. இவற்றுள் ஆந்தைப் போன்ற பறவைதான் சோகத்தில் இருந்த விலங்குகளின் தலைவன் போல ஒவ்வொரு முறையும் அழுகையை தொடங்கியது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040