• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தோஃபூ
  2013-02-01 16:24:03  cri எழுத்தின் அளவு:  A A A   
பொதுவாக சமையல் செய்யும்போது சில நேரங்களில் வினோதமான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாலோ, தொலைபேசி அழைப்பாலோ அல்லது மறதியாலோ அடுப்பில் வைத்தது தீய்ந்து போவது, காரமோ, உப்போ அதிகமாக போட்டுவிட்டு சமாளிக்க எலுமிச்சை, புளி, உருளைக்கிழங்கு என்று எதையாவது சேர்த்து ஒப்பேற்றுவது, அவசரத்தில் எதையோ செய்து அது நன்றாக இருந்துவிட, அடுத்த முறை அதேபோல் செய்ய முயற்சித்தால் அந்தச்சுவையுடன் செய்ய முடியாமல் போவது, இப்படி பல அனுபவங்களுக்கு நாம் ஆளாகியிருப்போம். நாம் எனும்போது சமைக்கத் தெரிந்து, சமைக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ளவர்களையும் சேர்த்துத்தான். இதில் இன்னுமொரு கொடுமை, எதையோ செய்ய நினைத்து, அது வேறு எதுவாக மாறுகின்ற அனுபவம். ஆம்லெடு செய்யப்போய் முட்டை பொடிமாஸ் செய்துமுடிப்பது போல என்று வைத்துக்கொள்ளலாம்.
1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040