• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தோஃபூ
  2013-02-01 16:24:03  cri எழுத்தின் அளவு:  A A A   

பொதுவாக ஒரு பெண்ணை விளையாட்டாக சுற்றி வருகிற, அதாவது கடலை போடுகிற, நூல் விடுகிற ஆணை குறிப்பிடும்போது, "அவளது தோஃபூவை தின்கிறான்" என்பார்கள். இதற்கு பின்னணியில் ஒரு கதை உண்டு. முன்பொரு காலத்தில் ச்சாங் ஆனில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தோஃபூ கடையை வைத்திருந்தனர். கணவன் இரவில் தோஃபூவை தயாரிக்க, மனைவி பகலில் அவற்றை கடையில் வைத்து விற்றாள். அந்த பெண் மிகவும் அழகானவள். அவள் தோஃபூ பயன்படுத்தியதால் வந்த மினுமினுப்பான தோலும் காரணமாக இருக்கலாம். கடையில் அமர்ந்திருக்கையில், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பொதுவாக அவள் விளையாட்டாக கொஞ்சிப் பேசி பழகுவாள். எனவே, அருகில் இருந்த ஆண்கள் எல்லாம் அவளது கடைக்கு, தோஃபூ சாப்பிடுகிறேன் பேர்வழி என்று வருகை தந்து, அவளை கண்டு ரசித்து, விளையாட்டாக பேசி மகிழ்ந்து, கடலைப் போட்டுவிட்டு செல்வர், அல்லது கவர்ந்திழுக்க முயற்சிப்பர். ஆக, காலப்போக்கில் நூல் விடுவது, காதல் மயக்கத்தில் சரச விளையாட்டுக்கென அல்வா கிண்டுவது, ஏன் கிண்டல் செய்வதாக எண்ணி தொந்தரவு செய்வது இவற்றுக்கெல்லாம் ச்சு தோஃபூ – அதாவது "தோஃபூ திண்பது" என்ற விளி பயன்பாட்டுக்கு வந்தது.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040