• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தோஃபூ
  2013-02-01 16:24:03  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் செழுமையான பண்பாட்டில் சோயா அவரையும், தோஃபூவும் மிக ஆழமாக ஊடுருவியுள்ளன. பொதுவாக சீனாவில் அழகான ஆனா எழையாக உள்ள ஒரு பெண்ணை தோஃபூ ஷி ஷி என்று குறிப்பிடுவதுண்டு. முதலில் ஷிஷி யார் என்று அறிவோம். சீனாவின் நான்கு பேரழகிகளில் ஒருவராக ஷி ஷி என்ற பெண்ணை கூறுவர். அவள் ஆற்றில் தன் தலைமேல் போடும் துணியை அலசுகையில், மீன்கள் அவள் அழகில் மயங்கி, நிலைகுத்தி நின்று அப்படியே கல் போல ஆற்றின் அடியில் போகுமாம். அந்த அளவுக்கு பேரழகி அவள். காலப்போக்கில் அவளுடைய பெயரான ஷி ஷி என்பது அழகை குறிக்கும் சொல்லாகிப்போனது. லூ ஷுன் என்பவர் எழுதிய சொந்த ஊர் என்ற புதினத்தில், தோஃபூ கடை வைத்திருந்த யாங் அழகான பெண்மணியை தோஃபூ ஷிஷி என்று குறிப்பிடுகிறார். தோஃபூ கடை வைத்திருந்த அழகான பெண்மணி என்ற பொருளில் அவர் அப்படி குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், இந்த தோஃபூ ஷிஷி என்ற விளி, காலப்போக்கில் அழகான முகமும் ஏழ்மையான பின்னணியும் கொண்ட பெண்களை குறிக்க பயன்படுத்தபட்டது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040