• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தோஃபூ
  2013-02-01 16:24:03  cri எழுத்தின் அளவு:  A A A   

இப்படியாக தோஃபூ மக்களிடையே பரவத்தொடங்க, தோஃபூவை வைத்து மக்கள் தங்களுக்கு பிடித்த பாணியில், சுவையில் சமைக்கத்தொடங்கினர். வேறுபட்ட பகுதிகளில், வேறுபட்ட சுவைகளில், பாணிகளில் தோஃபூ மக்களின் உணவாகியது. மாபா தோஃபூ, கெட்ட வாடை தோஃபூ, கெட்டியாகாத தோஃபூ கலவை போன்றவை தோஃபூ உணவு வகைகளில் புகழ்பெற்றவை. எளிய அவரைப்பால் தயிர்க்கட்டி என்றாலும், இன்றளவும் விருந்துகளில் பல வண்ணங்களில், வடிவங்களில், சுவைகளில் பரிமாறக்கூடிய அளவுக்கு தோஃபூ சிறப்புக்குரிய உணவுப்பொருளாக இருக்கிறது. தோஃபூவும், தோஃபூவின் உப பொருட்களும் சீன மக்களின் பொதுவான உணவாக இருப்பதோடு, வெளிநாடுகளுக்கும் பரவி, பெரிதும் வரவேற்கப்பட்ட உணவாக மாறியுள்ளது.

குறைவான கொழுப்புச்சத்து, அதிக புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச்சத்து கொண்டது தோஃபூ. தோஃபூவுக்கென அதன் சுவையும், மணமும் உண்டு என்றாலும், சுவை பொருட்களாக மசாலாக்களையும் சேர்த்தால் அதை தனக்குள் ஈர்த்து, சுவை கூட்டக்கூடிய தன்மை கொண்டது. தரமும், ஊட்டச்சத்தின் மேன்மையும், ஆண்டாண்டுகளாக தோஃபூவை சீனாவில் பரவலான பயன்பாட்டு உணவாக இருக்கச்செய்துள்ளது. இதே காரணத்தால், மேற்குலகும் தோஃபூவை அரவணைத்துக்கொண்டுள்ளது. தோஃபூவின் 95 விழுக்காட்டுப் பகுதி எளிதில் செறிமானம் ஆகக்கூடியதாக அமைகிறதாம். நம் உடலுக்கு தேவைப்படும் அன்றாட சுண்ணாம்புச்சத்துக்கு நாளுக்கு இரண்டு கட்டி தோஃபூவை சாப்பிட்டால் போதும் என்கிறார்கள்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040