• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கதை:வெள்ளை டிராகன் மலை
  2013-02-01 17:02:34  cri எழுத்தின் அளவு:  A A A   

இதனிடையில், தன் மகன் உடலும் மனதும் தெம்படைய இருப்பதை கண்ட டிராகன் மன்னன், என்னமோ நடக்கிறது என்று புரிந்துகொண்டான். எனவே தன் மகன் என்ன செய்கிறா என்று ரகசியமாய், மறைந்திருந்து கவனித்தான். செம்பகப்பறவையும், குதிரையும் அவனுடன் கூட்டு சேர்ந்து அவன் காதலியை சந்திக்கச் செல்வதை அறிந்தான் மன்னன். அடுத்து நாளிரவு, மறைந்திருந்து இளவரசன் புறப்படும் வரை காத்திருந்து, பின் அவனை பின் தொடர்ந்து சென்றான். வெள்ளை டிராகனை தன் மகன் சந்திப்பதை கண்டதும், கோபத்தில் தன் கை அந்த செம்பகப் பறவையிருந்த கூட்டை நோக்கி வீச, அது தூரச் சென்று ஒரு சிறுகுன்றின் மேல் மோதியது. அடுத்து வாளெடுத்து குதிரையின் தலையை வெட்ட, தலையில்லாமல், சேணம் கட்டிய குதிரை நின்றது.

பிற்காலத்தில், செம்பகப்பறவைக்கூடு மோதிய குன்று செம்பகப்பறவை கூடு என்றும், லுங் மலை வெள்ளை டிராகன் மலை என்றும், தலையில்லாத குதிரை நின்ற இடம், சேண மலை என்றும் அழைக்கபடலாயிற்று.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040