• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மக்கெளவில் ட்சாங் களிமண் சிற்பக் கலையின் வளர்ச்சி
  2013-02-19 10:19:08  cri எழுத்தின் அளவு:  A A A   

"2009ஆம் ஆண்டு, தியன் ஜின் மற்றும் மக்கெளவின் வரலாற்றை கருப்பொருளாக கொண்டு களிமண் சிற்பங்களை உருவாக்கத் துவங்கினேன்" என்றார் ட்சாங் ஸ சுயுன் அம்மையார்.

களிமண் சிற்பக்கலை, சீனாவின் புகழ்பெற்ற நாட்டுப்புற கைவினைக் கலையாகும். களிமண் சிற்பங்கள், களிமண்ணை மூலப்பொருளாகக் கொண்டு, சிறந்த கலைஞரின் கைகளால் உருவாக்கப்படுகின்றன. சீனாவில், "களிமண் ட்சாங் சிற்பம்" மிகவும் புகழ்பெற்றது. தியேன் ஜின் நகரைச் சேர்ந்த ச்சாங் மிங் ஷான் 1826ஆம் ஆண்டு பிறந்தார். அவர் பாரம்பரிய களிமண் சிற்பக் கலையின் அடிப்படையில் அவரது கலைப் பாணியை உருவாக்கினார். அவர் உருவாக்கிய களிமண் சிற்பங்கள், பெரும்பாலும் அக்காலத்தில் பொது மக்களின் உருவங்களாக இருந்தன. இந்த தத்ருமான உருவங்கள், பொது மக்களின் பாராட்டைப் பெற்றன. ச்சாங் மிங் ஷானும் அவரது பிற்காலத் தலைமுறையினரும் களிமண் சிற்பக் கலையில் பெரிதும் ஈடுபட்டதுடன், "ட்சாங் களிமண் சிற்ப" கலை, உலகளவில் படிப்படியாக பிரபலமாகியது. 2006ஆம் ஆண்டு "ட்சாங் களிமண் சிற்பக்" கலை, சீனாவின் முதலாவது தொகுதி பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ட்சாங் ஸ சியுன் அம்மையார், ச்சாங் மிங் ஷானின் ஐந்தாவது தலைமுறை வாரிசுகளில் ஒருவர் ஆவார்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040