• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உணவுச் சேமிப்பு தொடர்பான தகவல்கள்
  2013-02-28 10:00:11  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலில் பழங்கள்:

திராட்சை, ஆப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள், ஆப்பிள்- ஒரு மாதம், எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் - 2 வாரங்கள், அன்னாசி - 1 வாரம்

அடுத்து காய்கறிகள்: உரித்த பட்டாணி 3-5 நாட்கள், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, புதினா இலை 1-2 வாரங்கள், வெள்ளரிக்காய் - ஒரு வாரம், தக்காளி 1-2 நாட்கள், காலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம், காளான் 1-2 நாட்கள்.

சாப்பிட்டப்பிறகு செய்யக் கூடாத செயல்கள்.

நம் உடலில் வரும் நோய்களுக்கு பெரும் காரணம் கிருமிகள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் உடலில் நோய் வருவதற்கு நாம் தான் காரணம். எப்படியெனில், நம் மில் பெரும்பாலானவர்களுக்கு எந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. அவ்வாறு தெரியாததாலேயே, பல நோய்கள் நமது உடலைத் தாக்குகின்றன. அது என்ன செயல்கள் என்று பார்க்கலாம்.

தற்போது நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் தான் மாற்றங்கள் என்று நினைத்தால், உண்ட பின்பு கூட செய்யும் செயல்களில் வரவர மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலர் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று சாப்பிடப் பிறகு நடப்பது, புகைப் பிடிப்பது என்றெல்லாம் செய்வார்கள். இது மட்டுமின்றி, இதுபோன்று இன்னும் பல செயல்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த செயல்களை இனிமேல் உண்ட பின்பு செய்யாமல், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகளை பின்பற்றி வாழலாம்.

புகைப்பிடிப்பது -பெரும்பாலான ஆண்கள் சாப்பிட்டதும், தங்களை இலகுவாக வைத்துக் கொள்வதற்காக என்ற பெயரில் புகைப் பிடிப்பார்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட் பிடித்தால், அது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலானது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் கண்டுபிடித்திருகிறார்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040