• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா
  2013-03-12 09:55:54  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகில் அரங்கேற்றங்களை நடத்தி வருகிற போதிலும், தற்போது குவெய் இசை நாடகத்தின் நிலைத்திருப்பதும் கையேற்றல் நிலையும் மிகவும் கடினமானவை. 2012ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா நடைபெற்றது. அந்த அரங்கேற்றத்தில் இரண்டு பகுதிகள் இடம்பெற்றன. முதல் பகுதியில் பாராம்பரிய குவெய் இசை நாடகங்கள் அரங்கேற்றின. இரண்டாவது பகுதியில், தலைசிறந்த பீக்கிங் இசை நாடகங்கள் அரங்கேற்றின. முதல் பகுதியில், லீ பிங் சூ மற்றும் ஷாங் ச்சாங் ரோங்கின் அரங்கேற்றம், உச்சத்தை எட்டியது. குறிப்பாக 70 வயதான ஷாங் ச்சாங் ரோங்கின் அரங்கேற்றத்தை பார்த்து மகிழ்ந்த அதிகமான பார்வையாளர்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து, கைதட்டிப் பாராட்டினர்.

"ஷாங்காயில் நடைபெற்ற இந்த இசை நாடக விழா, முக்கியத்துவம் வாய்ந்தது. குவெய் இசை நாடகக் கலைஞர்களும், பீக்கிங் இசை நாடகக் கலைஞர்களும் ஒரே மேடையில் அரங்கேற்றம் அளித்து, தலைசிறந்த ஒத்துழைப்பு மேற்கொண்டனர். அரங்கேற்றத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் நல்ல வாய்ப்பு இதுவாகும். குவெய் மற்றும் ஹுபெய் இசை நாடகங்கள், பீக்கிங் இசை நாடகத்தின் ஊற்று மூலமாக இருக்கின்றன. கடந்த 200 ஆண்டுகளாக, பீக்கிங் இசை நாடகத்தின் தனிச்சிறப்பு உருவாகி வளர்ந்து வந்துள்ளது" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040