• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழா
  2013-03-12 09:55:54  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங் ச்சாங் ரோங்கைப் போல், பீக்கிங் இசை நாடகக் கலைஞர்கள் அனைவரும், முதன்முறையாக அரங்கில் குவெய் இசை நாடகத்தை அரங்கேற்றினர்.

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, யு குய் ட்ச்சியும் லி ஷெங் சுவும் கூட்டாக அரங்கேற்றிய பீக்கிங் இசை நாடகத்தின் ஒரு பகுதியாகும். இந்த குவெய் மற்றும் பீக்கிங் இசை நாடக விழாவின் இரண்டாவது பகுதியில், தேசிய பீக்கிங் இசை நாடக அரங்கு மற்றும் ஷாங்காய் இசை நாடக அரங்கைச் சேர்ந்த யு குய் ட்ச்சு, லி ஷெங் சு, ஷி யி கொங் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்கள், பாரம்பரிய பீக்கிங் இசை நாடகப் பகுதிகளைப் பாடினர். அவர்களின் அரங்கேற்றம் மூலம், பீக்கிங் மற்றும் குவெய் இசை நாடகங்களுக்கு இடையே நெருங்கிய உறவையும், குவெய் இசை நாடகம் உள்ளிட்ட சீனாவின் பாரம்பரிய இசை நாடகச் செல்வங்களின் அடிப்படையில், பீக்கிங் இசை நாடகத்தின் கையேற்றல் மற்றும் வளர்ச்சியையும் பார்வையாளர்கள் காண முடியும். இறுதியில், யு குய் ட்ச்சுவும், லி ஷெங் சுவும் கூட்டாக அரங்கேற்றிய இசை நாடகமான "டாங் வம்சப் பேரரசரின் துணைவி"யின் ஒரு பகுதி, அரங்கின் சூழ்நிலையை உச்ச நிலைக்குக் கொண்டுச் சென்றது.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040