• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மீவேகக் கணினி
  2013-03-22 20:53:26  cri எழுத்தின் அளவு:  A A A   

உயர் திறனுடைய கணினி தொழில் நுட்பத்தைக் கொண்ட நாடுகள், தேசிய பாதுகாப்பு, அறிவியல், மருத்துவயியல், எரிப் பொருள் முதலிய துறைகளில் மேம்பாடுகளையும் பெற முடியும் என்று அமெரிக்க எரியாற்றல் அமைச்சர் ஸ்டீவன் ஜோ கூறினார். டைட்டன் கணினி இதர உயர் திறனுடைய கணினிகளுடன் சேர்ந்து அமெரிக்காவின் மேம்பாடுகளை உறுதிப்படுத்தும் வசதியாக மாறுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க லாரன்ஸ் லிபமோல் தேசிய ஆய்வகத்தின் redwood, ஜப்பானிய பொறியியல் மற்றும் வேதியியல் ஆய்வகத்தின் ஜீங், அல்குங் தேசிய ஆய்வகத்தின் மீலா, ஜெர்மனி யூலிஹி ஆய்வு மையத்தின் JUQUEEN ஆகியவை இந்த வரிசையில் 2 முதல் 5ஆம் இடம் வரையுள்ள கணினிகளாகும்.

சீனாவின் தியேன் ஹெ-1ஏ கணினி இரு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2010ம் ஆண்டில் மீவேகக் கணினியின் வரிசையில் முதலிடம் வகித்தது. இவ்வாண்டு அது 8வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சீனாவைச் சேர்ந்த மொத்தம் 72 மீவேகக் கணினிகள் உலகில் மிக வேகமான 500 கணினிகளின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 500 கணினிகளில் சுமார் பாதி அமெரிக்காவைச் சேர்ந்தவை. இதனால் இத்துறையில் அமெரிக்காவின் மேம்பாடு தெளிவாகத் தெரிகின்றது. சீனா அமெரிக்காவுக்கு அடுத்து 2ஆம் இடத்தில் உள்ளது.

மீவேகக் கணினி நாட்டின் அறிவியல் ஆய்வுத் துறைக்குத் தேவையான அடிப்படை வசதியாகும். நிலவியல், காலநிலை, எண்ணெய் கண்டுபிடிப்பு, முதலிய ஆய்வுத் துறைகளில் அது முக்கிய பங்காற்றும். வாகனம், விண்வெளிப் பயணம், வேதியியல் தொழிற்துறை, மருந்து தயாரிப்பு முதலிய தொழில்களிலும் முக்கிய ஆய்வு வசதியும் ஆகும். 1993ஆம் ஆண்டு முதல், உலகளவில் பொருத்தப்பட்டுள்ள மீவேகக் கணினிகளை ஆய்வு செய்து மிக அதிக திறனுடைய 500ஐத் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 2 முறை சர்வதேச டாப் 500 அமைப்பு இந்தப் பெயர் பட்டியலை வெளியிடுகிறது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040