சீனத் தலைமையமைச்சர் லீ கேச்சியாங் 17ம் நாள், 12வது சீனத் தேசிய மக்கள் பேரவை முதல் கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையில், பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சி, மக்கள் வாழ்க்கை மேம்பாடு, சமூக நீதியின் முன்னேற்றம் ஆகிய மூன்று பிரச்சினைகளை நடப்பு அரசு தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.