சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12வது தேசியக் கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரில், சீனாவின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கருத்துருக்களை வழங்கியுள்ளனர். சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளின் பாதுகாப்பையும், அதன் வளர்ச்சியையும் ஒன்றிணைப்பதற்கும், அரிய சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கு கையேற்றப்படுவதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தமது கருத்துருகளின் மூலம் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களின் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளின் கையேற்றல் மற்றும் பாதுகாப்பு சாதனைகளை வெளிப்படுத்தும் மேடையை உருவாக்கி, அரசு சாரா பிரமுகர்கள் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பங்கெடுக்க வேண்டும் என்றும், சர்வதேச பார்வையுடன், சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளைக் கையேற்ற வேண்டும் என்றும் சீனாவின் வட மேற்கு பகுதியைச் சேர்ந்த சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.