சீனாவில் 56 தேசிய இனங்கள் உள்ளன. சில தேசிய இனங்களின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், இவ்வினங்களின் பண்பாடுகள், அழியும் விளிம்பில் உள்ளன. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் 2200 உறுப்பினர்களில், 258 பேர், சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு தேசிய இனங்கள், குறிப்பாக தங்களது இனத்தின் பண்பாட்டின் பாதுகாப்பு மற்றும் கையேற்றலை விரைவுபடுத்த பாடுபடவுள்ளதாக உறுப்பினர்கள் பலர் தெரிவித்தனர்.
நேயர்கள் இது வரை, "சீனாவில் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளின் பாதுகாப்பு" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.