இவ்வாண்டின் பிப்ரவரி திங்கள், உஸ்பெக் இனப் பண்பாட்டுத் தொடர்புச் சங்கம், சீனாவின் முதலாவது "உஸ்பெக் இன நிழற்படக் கண்காட்சியை" நடத்தியது. அரசு சாரா பிரமுகர் அதிக பங்காற்ற முடியும் என்றும், அரசின் கொள்கைகளின் ஆதரவுடன், பல்வேறு சமூகப் பிரமுகர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளைப் பாதுகாத்து, கையேற்ற வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"மக்கள் தொகை குறைவாக இருக்கும் உஸ்பெக் இனத்தை மேலதிக மக்கள் அறிந்து கொள்ளச் செய்வது, நிழற்படக் கண்காட்சியை நடத்தும் நோக்கமாகும். சிறுபான்மை தேசியப் பண்பாடுகளும், இந்த உலகத்தைச் சேர்ந்தவை. இவ்வாண்டின் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டிக் கூட்டத்தொடரில் சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்தின் பண்பாட்டு வளர்ச்சி பாதுகாப்பை அரசு வலுப்படுத்துவது தொடர்பான கருத்துரு ஒன்றை வழங்கினேன்" என்றார் அவர்.