சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினர் தெயிமிக் டிவனா தஜிக் இனத்தைச் சேர்ந்தவர். தஜிக் இனம், பமிர் பீடபூமியின் "கழுகு" என புகழ்ந்து பாராட்டப்படுகிறது. கழுகு எலும்பினால் தயாரிக்கப்பட்ட கழுகு புல்லாங்குழல், தஜிக் இனத்தின் தனிச்சிறப்பு மிக்க இசைக் கருவியாகும் என்று தெயிமிக் டிவனா தெரிவித்தார். கழுகு புல்லாங்குழலை முறைப்படி இசைப்பதை கற்றுக்கொள்ள காஷ் கலைக் கல்லூரிக்கு 10 மாணவர்களை அவர் வாழும் வட்ட அரசு அனுப்பியுள்ளது. மூன்று ஆண்டுகள் அவர்கள் இசைக் கல்வி பெறுவர். அதற்குப் பிறகு, அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும். தெயிமிக் டிவனா கூறியதாவது:
"கழுகு புல்லாங்குழல், தஜிக் இனத்தின் இசைக் கருவியாகும். கழுகு புல்லாங்குழல் இசைப்பதற்கு வாரிசுகளை உருவாக்க, அரசு கொள்கையை வகுத்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் உறுப்பினராகிய நான், சின்ச்சியாங்கின் சிறுபான்மை தேசிய இன இசைக் கருவிகளை இசைக்கும் விழா, உலகளவில் நடைபெற வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார் அவர்.