உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த ஃபதிமா மாஹமுதி அம்மையார், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் உறுப்பினர் ஆவார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் உஸ்பெக் இனப் பண்பாட்டுத் தொடர்பு சங்கத்தை நிறுவினார். தற்போது இந்த அரசு சாரா அமைப்பு படிப்படியாக வளர்ந்து வருகிறது. மாஹமுதி அம்மையார் கூறியதாவது
"இச்சங்கம் நிறுவப்பட்ட துவக்கத்தில் 50 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 200 உறுப்பினர்கள் இதில் உள்ளனர். உஸ்பெக் இனப் பண்பாட்டைப் பரப்புரை செய்யும் பொருட்டு, இரண்டு முறை Rou Zi விழாவை இச்சங்கம் நடத்தியது. Rou Zi விழா, சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவுக்குச் சமம். இவ்விழாவில் உஸ்பெக் இனத்தின் ஆடைகள், நன்நடத்தை ஆகியவை வெளிப்படுத்தப்படுகின்றன" என்றார் அவர்.