• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சின் ச்சியாங் இசை நாடகக் கலையின் வளர்ச்சி
  2013-04-02 09:23:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சின் ச்சியாங், ஷான் சி, கான்சு, சின்காய் உள்ளிட்ட பிரதேசங்களில் பரவி வரும் பழமை வாய்ந்த இசை நாடகமாகும். இதன் பாட்டொலி, உரக்க ஒலிக்கிறது. ச்சின் ச்சியாங் கலையின் தனிச்சிறப்புக்கும், தற்காலச் சமூகத்தில் மக்களின் வேகமான வாழ்க்கை முறைக்குமிடையே பெரும் இடைவெளி நிலவுகிறது. அதனால், ச்சின் ச்சியாங் இசை நாடகக் கலையை நேசித்து, இசை நாடக அரங்கிற்கு வந்து அதனை கேட்டு பார்த்து மகிழும் இளைஞர்கள் மிக குறைவு. ச்சின் ச்சியாங் ஆர்வலர்களில் முதியோர் பல முக்கிய இடம் வகிக்கின்றனர். ஷான் சி மாநிலத்தின் இசை நாடக ஆய்வகத்தைச் சேர்ந்த தலைவர் தெய் ச்சிங் கூறியதாவது:

"ச்சின் ச்சியாங்கை நன்றாக கேட்டு ரசிக்க வேண்டுமானால், மக்கள் குறிப்பிட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பெற வேண்டும். இளைஞர்கள் இசை நாடகத்தில் ஆர்வம் கொள்ளவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளோம். இங்கே ச்சின் ச்சியாங் தொடர்ந்து அரங்கேற்றினால், என்றாவது ஒரு நாள் ச்சின் ச்சியாங் கலை மீதான இளைஞர்களின் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். ஏனெனில், ச்சின் ச்சியாங் கலை , மக்களின் விருப்பங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியும். ச்சின் ச்சியாங் வட மேற்கு சீனாவில் பரவி வருவதால், அது மக்களின் வாழ்க்கையில் படிப்படியாக ஒன்றிணையும் என்று நம்புகிறோம்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040