• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சின் ச்சியாங் இசை நாடகக் கலையின் வளர்ச்சி
  2013-04-02 09:23:34  cri எழுத்தின் அளவு:  A A A   

பெள ச்சி நகரின் ச்சின் ச்சியாங் இசை நாடக அரங்கு ஆண்டுதோறும் கிராமப்புறங்களில் 30க்கு அதிகமான இலவச அரங்கேற்றங்களை நடத்துகிறது. அரங்கேற்றத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை, சராசரியாக 3000ஐ எட்டியுள்ளது. பார்வையாளர்களின் ஆதரவு, இசை நாடகத்தை அரங்கேற்றுவோர்களுக்கு பெரும் ஊக்கம் தந்துள்ளது. ச்சின் ச்சியாங் கலையின் வளர்ச்சி மீது தெய் ச்சிங் முழு நம்பிக்கை கொண்டுள்ளார். ச்சின் ச்சியாங் இசை நாடகம் தொழில்மயமாகும் வளர்ச்சியில், இன்னும் இன்னல்கள் நிலவுகின்றன என்றும், ஆனால் நாட்டுப்புறங்களில் ச்சின் ச்சியாங் பண்பாடு செழிப்பாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், ச்சின் ச்சியாங் கலை தேக்க நிலையிலிருந்து படிப்படியாக விடுபட்டு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"தற்போது சீனப் பாரம்பரியப் பண்பாட்டில் சீனர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. பாரம்பரியப் பண்பாட்டின் மதிப்பு மீண்டும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பின்னணியில், இசை நாடக ஆர்வலர்கள் அதிகரித்துள்ளனர். தற்போது தனிநபர்கள் பாடி மகிழும் Karaoke கூடங்கள், ச்சின் ச்சியாங் இசை நாடக தேனீரகங்களாக மாறியுள்ளன" என்றார் அவர்.

நேயர்களே, "ச்சின் ச்சியாங் கலையின் வளர்ச்சி" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040