• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:ச்சின் ச்சியாங் இசை நாடகக் கலையின் வளர்ச்சி
  2013-04-02 09:23:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சின் ச்சியாங் இசை நாடகத்தை விரும்பிப் பார்க்கும் பார்வையாளர்களில் முதியோர் அதிகம். இத்தகைய பார்வையாளர்களின் வருமானமும் நுகர்வு ஆற்றலும் குறைவாக இருக்கின்றன. அதனால், பெள ச்சி நகரின் இசை நாடக அரங்கு, "வாரதோறும் ச்சின் ச்சியாங் பாடுவது" என்ற பொது நல பண்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இந்நடவடிக்கை நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு அவ்விடத்தில் அரங்கேற்ற நுழைவுச் சீட்டு விலை மிகவும் குறைவு. அது மட்டுமல்ல, 30 சீட்டுகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பெள ச்சி நகரின் இசை நாடக அரங்கின் நடிகர் Chen Zhi Quan செய்தியாளரிடம் கூறியதாவது:

"இந்நகரில் மேலதிக ச்சின் ச்சியாங் ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில், இந்நகரின் பண்பாட்டு ஆணையம் 'வாரதோறும் ச்சின் ச்சியாங் பாடுவது' என்ற நடவடிக்கையை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நடவடிக்கையை நடத்திய துவக்கத்தில் இங்கே வந்து ச்சின் ச்சியாங்கைக் கேட்டு இரசிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மக்கள் ச்சின் ச்சியாங்கைக் கேட்டு மகிழ்வதை பழக்க வழக்கமாக கொண்டிருக்கவில்லை. அவர்கள் இசை விழாவுக்கு வரும்போது, சில நூறு யுவான் விலையுடைய சீட்டை வாங்க விரும்புகின்றனர். ச்சின் ச்சியாங் அரங்கேற்றத்துக்கான சீட்டுகளின் விலை பத்து யுவான் மட்டுமே. ஆனால் மக்கள் இச்சீட்டை வாங்கி ச்சின் ச்சியாங்கை கண்டுகளிக்க விரும்பவில்லை. அதன் பின்னர், பொது மக்களுக்கு நன்மை பயக்கும் பொருட்டு, சீட்டின் விலை 5 யுவான் என உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அரங்கேற்றத்திற்கு உரிய பொருளாதார பயன் கிடைக்கவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின், ஏறக்குறைய அடுத்த ஆண்டு பயன்கள் கிடைக்கக்கூடும்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040