• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு விறுவிறுப்பான இளைஞர் குழுவான தமிழ் பிரிவு
  2013-04-25 17:13:23  cri எழுத்தின் அளவு:  A A A   

வணக்கம் நேயர்களே. அடுத்து சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன் விழா எனும் பொது அறிவுப்போட்டிக்கான 2வது கட்டுரையை வழங்குகின்றோம். இன்றைய நிகழ்ச்சியில், ஒரு விறுவிறுப்பான இளைஞர் குழுவான தமிழ் பிரிவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். தொகுத்து வழங்குபவர் ஈஸ்வரி

இன்று, கலைமகள், வாணி ஆகியோர் தவிர, வான்மதி, தேன்மொழி, ஜெயா, ஓவியா முதலிய இளைஞர்களின் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களையும் தமிழ் பிரிவு மூலம் தாங்கள் அடைந்த வளர்ச்சியையும் கூறுவர். அவர்களது முன்னேற்றம் மூலம், தமிழ் பிரிவின் சாதனைகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

முதலில், தமிழ் பிரிவின் தலைவர் கலைமகள் தமிழ் பிரிவின் வளர்ச்சி பற்றி கூறியதாவது:

சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய போது, நாள்தோறும் அரை மணி நேரம் தான் நிகழ்ச்சியை வழங்கப்பட்டது. சில தலைமுறை பணியாளர்களின் முயற்சி மூலம், தமிழ்ப்பிரிவு மென்மேலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது, சிற்றலை, பண்பலை, இணையதளம், தமிழொலி என்னும் இதழ், கைபேசி இணையம் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. பன்முக ஊடகமாக தமிழ்ப்பிரிவு மாறியுள்ளதாகக் கூறலாம்.

இன்றைய தமிழ்ப்பிரிவில் இளம் பணியாளர்கள் மிக அதிகம். இந்த இளைஞர்களின் புதிய கருத்துக்களால் தமிழ்ப்பிரிவின் வளர்ச்சி பெரிதும் முன்னேற்றப்பட்டு வருகிறது. பெற்ற சாதனைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ்ப்பிரிவு தொடர்ந்து வளரும். கடந்த சில ஆண்டுகளில், வளர்ச்சி என்பது, தமிழ்ப்பிரிவு வரலாற்றில் முக்கிய சொல் ஆகும். எதிர்காலத்தில் ஒத்துழைப்பு என்பது, தமிழ்ப்பிரிவின் புதிய கடமையாக மாறும். நாங்கள் எங்களது திறனை வலுப்படுத்துவதோடு, பல்வேறு துறைகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள முயற்சி செய்வோம். குறிப்பாக, தமிழகத்தில் பண்பலை நிகழ்ச்சியைத் தொடங்குவது, கன்ஃப்யூசியஸ் கல்லூரி நிறுவுவது, தமிழொலி என்னும் இதழ் தமிழகத்தில் அச்சிட்டு வழங்குவது ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இவ்வாண்டு, தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய பொன் விழா ஆண்டாகும். அனைவரின் கூட்டு முயற்சியில் தமிழ்ப்பிரிவு, மேலும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

கலைமகளின் கூற்றைக் கேட்டு, தமிழ் பிரிவுக்கு இருக்கும் அருமையான எதிர்காலத்தைக் கண்டு பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறோம்.

இனி, தமிழ் பிரிவின் துணைத் தலைவர் வாணி தங்களது வேலை அனுபவங்களைப் பற்றி கூறுகையில்,

சீனத் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்திலிருந்து பி ஏ பட்டம் பெற்ற பிறகு 1994ஆம் ஆண்டு சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவில் சேர்ந்து பணியாற்றத் துவங்கினேன். அப்போது, எஸ்•சுந்தரம், பி•ருசா, பொற்செல்வி, கலையரசி, ஜெ,ஹருமினா, மலர்விழி, தமிழ்ச்செல்வம் முதலிய ஆசிரியர்கள் அலுவலகத்தில் இருந்தனர். அவர்களிடமிருந்து தமிழ் மொழி, இந்தியா, ஆகியவை பற்றிய தகவல்களையும் ஒலிபரப்புத் தொழில் நுட்பத்தையும் கற்றுக்கொண்டு இப்பணியில் அதிக ஆர்வம் காட்டி புணி புரிந்து வருகின்றேன்.

அப்போது அலுவலகத்தில் கணினி வசதியில்லை. ஒரு மின் அச்சுப் பொறி மட்டுமே இருந்தது. எனது கல்வி பட்டத்துக்காக மகாத்மா காந்தி அவர்கள் பற்றி எனது முதலாவது தமிழ் கட்டுரையைக் கையால் எழுதியது குறிப்பிடத்தக்கது. பிறகு, தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்த கற்றுக்கொண்டேன். சுந்தரம் மற்றும் ஹருமினாவிடமிருந்து மேலும் அதிகமான ஒலிபரப்புத் திறனைக் கற்றுக்கொண்டேன். கட்டுரையை நன்றாக வாசிப்பதற்கு ஒலிபதிவு அறைக்கு நுழைவதற்கு முன், இக்கட்டுரையை குறைந்தது 10 முறை வாசிக்க பயற்சி செய்திருக்கின்றேன்.

அதற்கு பின்வந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவு அதிக புதிய பணியாளர்களை ஈர்க்கவில்லை. ஆனால், அலுவல்கள் பல மடங்காக அதிகரித்தது. முதலில், நாள்தோறும் அரை மணி ஒலிபரப்பு ஒரு மணி நேரமாகிவிட்டது. பிறகு, இணைய உருவாக்கத்தில் ஈடுபட்டோம். இந்தப் போக்கில் முன்னோடிகள் படிப்படியாக வயது காரணமாக பணியிலிருந்து விலகினர். குறைவான மனித ஆற்றலால் அதிக பணி செய்ய வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, இணையத்தில் சீனா பற்றி அறிவோம் என்ற பகுதிக்காக குறுகிய 3 திங்களில் சுமார் 20 இலட்சம் எழுத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை தமிழாக்கம் செய்தோம். அப்போதைய நிபுணர் திரு ராஜாரம் அவர்களின் நினைவிலும் அது ஆழமாகப் பதிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

2002 முதல் 2003ஆம் ஆண்டு நான் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டேன். புதுதில்லியில் வாழ்ந்த இக்காலத்தில் பல இடங்களில் பயணம் மேற்கொண்டேன். இந்தியாவின் அரசியல், பண்பாடு, மக்கள் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை படிப்பு மற்றும் பயணங்கள் மூலம் மேலும் அதிகமாக அறிந்து கொண்டேன். 2004 மற்றும் 2007ஆம் ஆண்டில் நான் இரண்டு முறை தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ளேன். சீன வானொலி மீது நேயர்கள் அளித்த ஆர்வத்தையும் நட்புறவையும் நேரில் கண்டு உணர்ந்தேன். இத்தகைய அனுபவங்கள் எனது பணியில் பெரும் பங்கு மற்றும் ஆதரவு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040