• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு விறுவிறுப்பான இளைஞர் குழுவான தமிழ் பிரிவு
  2013-04-25 17:13:23  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவின் சேவை பல்வகையாகிவிட்டது. இலங்கைக்கான பன்பலை ஒலிபரப்பு, இணைய நிகழ்ச்சி, செல்லிடபேசி செய்தி சேவை முதலிய புதிய ஊடக வழிமுறை மூலம் மேலும் அதிகமான தமிழ் நண்பர்கள் சீனா பற்றியும் சீன வானொலி பற்றியும் அறிந்து கொண்டுள்ளனர்.

தற்போது அலுவலகத்தில் இளைஞர்கள் அதிகம். ஒவ்வொருவரும் தனிப்பட்ட தொழில் நுட்பத் திறமை கொண்டுள்ளனர். உயிராற்றல் மிக்க இந்தக் குடும்பம் மேலும் உயர் தரமான சேவையை அளிக்கும் என்று நம்புகின்றேன் என்றார் வாணி.

இலட்சியத்தின் வளர்ச்சியுடன், தமிழ் பிரிவுக்கு மேலதிக திறமைசாலிகள் தேவைப்படுகிறது. எனவே, தமிழ் மொழி அறியாதவர்களை சேர்த்து தமிழ் மொழியைக் கற்பிக்கும் புதிய வழிமுறை துவங்கியது. 2002ஆம் ஆண்டு மீனா, வான்மதி ஆகியோரும், 2005ஆம் ஆண்டு மதியழகன், தேன்மொழி, கலைமணி, மோகன் ஆகியோரும் தமிழ் பிரிவில் சேர்ந்தனர். இப்போது, அவர்கள் வேலையில் முக்கிய ஆதார தூணாக மாறி பங்காற்றி வருகின்றனர். தொடர்ந்து வான்மதியும் தேன்மொழியும் அவர்களது சிறப்பு அனுபவங்கள் மற்றும் தமிழ் பிரிவின் எதிர்காலம் மீதான விருப்பங்களைப் பற்றி கூறுவர்.

வான்மதி கூறியதாவது:ஆசிரியர் பி லூசா அவர்களிடமிருந்து தமிழ் மொழியைக் கற்று கொண்ட நாட்கள், என்னைப் பொறுத்தவரை, மறக்க முடியாத நாட்களாகும். அப்போது இன்னல்களைச் சந்தித்த போதிலம், கல்வி அறிவு பெறும் மகிழ்ச்சியை அதிகமாக அனுபவித்துள்ளேன். பி. லூசா, சுந்தரம் உள்ளிட்ட மூத்த ஆசிரியர்களிடமிருந்து பலவற்றைக் கற்று கொண்டுள்ளேன். அவர்களது பொறுப்புணர்வு, விடாமுயற்சி, ஒலிபரப்பு இலட்சியத்தின் மீதான உற்சாகம் ஆகியவை என்னை மனமுருகச் செய்கின்றன. எனது மனதில் அவர்கள் பசுமை மாறா முன்மாதிரிகளாக திகழ்கின்றனர். அவர்களைப் போல, உணர்வுப்பூர்வமாகவும் ஊக்கத்துடனும் வேலை செய்ய வேண்டும். அவர்களைப் போல, சீன மொழியிலான அம்சங்களை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான தமிழாக்கம் செய்ய வேண்டும்.

காலத்துக்கு ஏற்ப முன்னேறி வரும் நமது தமிழ்ப்பிரிவின் ஈர்ப்பு ஆற்றல் அதிகரித்து வருகிறது. எங்களுக்கு மேலதிக வாய்ப்புகளைக் கொண்டு வரும் அதேவேளை, நேயர்களுக்கு மேலும் வேடிக்கையான நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகிறது. மேம்படுத்தப்பட்ட நமது இணையதளம் தமிழ் நாட்டில் நமது ஒலிபரப்பின் செல்வாக்கை உயர்த்தி, மேலதிக இளைஞர்களை ஈர்ப்பது நிச்சயம். நமது பிரிவின் எதிர்காலம் மேலும் அருமையாக இருக்கும் என நம்புகின்றேன்.

அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதில் எனக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் மிகக் குறைவு. வாய்ப்பு இருந்தால், காணொளி நிகழ்ச்சி எடுக்கும் குழுவில் பங்கெடுக்க விரும்புகின்றேன். பணிபுரியும் அதேவேளை இது திறமையை உயர்த்தும் நல்ல வழிமுறையாகும் என கருதுகின்றேன் என்றார் அவர்.

தேன்மொழி கூறுகையில்:2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல், சீன வானொலி நிலையத்தில் தமிழ் மொழி கொள்ள துவங்கினேன். திருமதி பி.ரூசா என் ஆசிரியரும் ஆவார். அப்போது இருந்த சூழ்நிலையின் படி, தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளும் அடிப்படையில், சொற்களை உச்சரித்து, கட்டுரை வாசித்து, மொழி பெயர்க்கும் முயற்சி துவக்கினோம். பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக் கற்றுக் கொள்ளும் சில பணியாளர்களுடன் ஒப்பிடும் போது, என்னிடம் சில வித்தியாசம் இருக்கிறது. நான் சீன வானொலி நிலையத்தில் இம்மொழியைக் கற்றுக்கொண்டேன். தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக்கொண்ட காலம், குறிப்பிட்ட அளவில் கொஞ்சம் குறைவு. ஒன்றரை ஆண்டு மட்டும் தான். என் நினைவில், ஒவ்வொரு திங்களுக்கு, ஒரு முறை தேர்வு மேற்கொள்ள வேண்டும். இது, எனக்குத் தலைவலி தரும் விடயமாகும்.

மேலும்,வல்லின ற மற்றும் இடையின ர, இந்த இரு எழுத்துக்களை வாசிக்க கற்றுக் கொண்ட போது, எனக்குக் கடினமாக இருந்த்து. இதர மாணவர்களை விட, நான் கடைசியாகத் தான், ற இந்த எழுத்தை வாசித்தேன். இது வரை, நன்றாக வாசிக்க முடியவில்லை. கற்றுக்கொள்ளும் போது, மிகவும் பதட்டமாக இருந்து, பல்வகை இன்னல்களை சந்தித்த போதிலும், நான் உறுதியாக நின்றேன்.இது தான், நான் இங்கு தமிழ்மொழிக் கற்ற அனுபவங்களாகும். இது வரை, நான் தமிழ் பிரிவில் சுமார் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்.

உண்மையில், பல வேலைகளையும் நடவடிக்கைகளையும் நான் மிக சீராக செய்யவில்லை. கடந்த ஆண்டில் தமிழ் பிரிவு நிறுவப்பட்ட 49-ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நடவடிக்கையை நான் ஏற்பாடு செய்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நடவடிக்கையில் கலந்துகொள்ளுமாறு பெய்சிங்கில் வாழ்கின்ற பல தமிழர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம். அதற்கு முன், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மற்றும் இணையத்தளத்தைப் பற்றி அவர்களில் பலர் அறிந்திருக்கவில்லை. இந்த நடவடிக்கையின் மூலம், அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் தொடர்பு அதிகரிக்கப்பட்டது. பிறகு, நானும் இரு சக பணியாளர்களும், ஈராண்டுகளாக நேயர் தொடர்புப் பணிக்குப் பொறுப்பேற்றோம். அடிப்படையில் இப்பணியை இனிதே நிறைவேற்றினோம்.

இப்போது, தமிழ் பிரிவில் மொத்தமாக 18 சீனப் பணியாளர்கள் வேலை புரிகின்றனர். அவர்கள் அனைவரும் இளைஞர்கள். கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில், எங்கள் இணையத்தளம் விரைவாக வளர்ந்துள்ளது. இணையத்தள மேடையைப் பயன்படுத்தி, சீனப் பண்பாட்டையும், சீனர்களின் வாழ்க்கையையும் பற்றி, தமிழ் நண்பர்கள் மேலும் புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டுமென விரும்புகின்றேன் என்றார் தேன்மொழி.

தற்போதைய விறுவிறுப்பான தமிழ் பிரிவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பெரிய பங்கு. 2007ஆம் ஆண்டு, நான், சரஸ்வதி, சிவகாமி, ஜெயா தமிழ் பிரிவில் சேர்ந்தோம். இப்போது ஜெயாவும் சிவகாமியும் நேயர்களுடன் தொடர்பு வேலைக்குப் பொறுப்பேற்றனர். தவிரவும், உங்களுக்குத் தெரியுமா நீங்கள் இணையதளத்தில் பார்த்த பல அழகான நிழற்படங்கள் ஓவியா வழங்கியவை. அவரும் அவரது 5 சகமாணவர்களும் 2011ஆம் ஆண்டு தமிழ் பிரிவில் சேர்ந்தனர். இப்போது, அவர்கள் தமிழ் பிரிவிலிருந்து கிடைத்த வளர்ச்சியை அறிவோம்.

ஜெயா கூறியதாவது:கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவில் அதிகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் 2007ஆம் ஆண்டு சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் சேர்ந்த போது, அதிகமான மூத்த பணியாளர்கள் பணி புரிந்தனர். அப்போது, இளைஞர்களான நாம், மூத்த பணியாளர்களின் உதவியுடனும், பாதுகாப்புடனும் ஒரு சில பணிகளைத்தான் செய்து வந்தோம். ஆனால், இப்போது கிட்டத்தட்ட அனைத்து மூத்த பணியாளர்களும் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். நாம், தமிழ்ப் பிரிவின் சில முக்கியமான பணிகளுக்குப் பொறுப்பேற்று மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பேட்டி காண்பது, நேயர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது, முன்பு பொறுப்பேற்காத மேலதிக நிகழ்வுகளில் ஈடுபடுவது முதலியவற்றில், மேலதிக பொறுப்போடும், ஈடுபாட்டோடும் பணி புரிய வேண்டியுள்ளது. பணி அழுத்தம் அதிகமாக இருந்தாலும், தமிழ் ஒலிபரப்பில் விரைவாக பெருமளவிலான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

நான் 2011ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் 2012ஆம் ஆண்டு மே திங்கள் வரை, இந்தியாவின் பாண்டிச்சேரியில் 6 மாத தமிழ் மொழி கல்வி பெற்றேன். அதன் மூலம், எனக்கு அதிகமான அனுபவங்கள் கிடைத்தன. அங்குள்ள தமிழ் நண்பர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களது வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டபோது, எனக்கு உண்மையாகவே இந்திய உணர்வு ஏற்பட்டது. தமிழ்ப் பிரிவுக்குத் திரும்பிய பிறகு, தமிழ் மொழியில் பரிமாற்றம் மேற்கொள்ளும் ஆற்றலில் சிறந்த முன்னேற்றம் பெற்றுள்ளதை உணர்கிறேன். நட்புப்பாலம், நேருக்கு நேர் முதலிய தமிழ் நண்பர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு இக்கல்வி அனுபவம் பெரிதும் உதவுகிறது. அதனால், அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த தமிழ்ப் பிரிவுக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது, நானும் எனது கல்லூரி நாட்களில் சகமாணவியும் தற்போதைய சகபணியாளருமான சிவகாமியும் சேர்ந்து, நேயர் கடிதப் பணியில் ஈடுபட்டுள்ளோம். நேரடியாக நேயர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இது, ஒரு கடினமான பணி தான் இருந்தாலும், நான் இயன்ற அளவில் அதை செவ்வனே செய்ய விரும்புகிறேன். நேயர்கள் தொடர்ந்து எங்களுக்கு அதிக ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

தமிழ் பிரிவின் இளைஞர் பிரதிநிதியாகிய ஓவியாவும் தங்களது வேலை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். ஓவியா கூறுகையில், பல்கலைக்கழகக் கல்வியின் போது, நாள்தோறும் செய்திகள் மொழிபெயர்ப்பு, வாரத்துக்கு ஒரு முறை நிகழ்ச்சி செய்வது என்பது தான் வானொலியின் வேலைகள் என்று நினைத்தேன். ஆனால், சீன வானொலியில் பணிக்கு வந்த பின், பெரிய வேறுபாடு உள்ளது. நான் முக்கியமாக இணைய வேலைக்குப் பொறுப்பேற்கிறேன். இந்த வேலைகளைத் தவிர, தமின் பிரிவில் புதிய பல்லூடகம் வேலை அதிகமாகக் இருக்கும். எடுத்துக்காட்டாக, கல்லூரியில் என் சகமாணவியான மேகலா இப்போது நிழற்படம் எடு்ககும் வேலைக்குப் பொறுப்பேர்கிறாள். கடந்த ஆண்டு, மதியழகனுடன் இணைந்து புதிய தமிழ் இணையத்தை விவமைத்தோம்.

பாரம்பரிய ரக ஊடகமாக இல்லாமல். புதிய ரக பல்லூடகமாகவே தமிழ் வானொலி திகழ்கிறது.

செய்திகள் மொழிபெயர்ப்பை விட இணையத்தளத்தில் மேலதிக பலன் உண்டு. எடுத்துக்காட்டாக, இணையத்தில் கேட்பதற்கு ஒலியை வைக்கலாம். தகவல்களைப் பார்த்து, கேட்க, காணொலியை வைக்கலாம். மேலும், இணையத்தளத்தில் படங்கள், எழுத்துக்கள் முதலியவை எல்லாவற்றையும், நாம் நினைக்கும் அனைத்தையும் இணயைத்தளத்தில் வைக்கலாம். இப்படியென்றால், போதுமான கற்பனை ஆற்றலை வெளிப்படுத்த, இணையம் ஒரு மிகவும் பெரிய மேடையாகும்.

மேலும், இந்த குழுவினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துகள் உண்டு. இது மிகவும் முக்கியமானது. படைப்பு என்பது ஊடகங்களின் உயிர். என் சகப்பணியாளர்களின் படைப்பு ஆற்றல் தமிழ் பிரிவுக்கும் எனக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்தது என்றார் ஓவியா.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040