• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:உய்கூர் இனத்தின் முசுக்கொட்டை மரத் தாள் தயாரிப்பு நுட்பம்
  2013-05-02 14:56:13  cri எழுத்தின் அளவு:  A A A   
இன்றைய நிகழ்ச்சியில், "உய்கூர் இனத்தின் முசுக்கொட்டை மரத் தாள் தயாரிப்பு நுட்பம்" பற்றிக் கூறுகின்றோம். அறிவிப்பாளர் தமிழன்பன்.

சீனாவின் சின்ச்சியாங்கின் ஹெதியன் பிரதேசத்தில், முசுக்கொட்டை மரத் தாள் பண்பாட்டு வீதி ஒன்றுள்ளது. 2012ஆம் ஆண்டின் இறுதியில், சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள், ஹெதியன் பிரதேசத்திலுள்ள மொ யூ மாவட்டத்தின் Pu Qia Ke Qi(புசியாகெச்சி)வட்டத்தில் பயணம் மேற்கொண்டனர். அவ்வட்டத்தின் பு தா கிராமம், Pu Qia Ke Qi முசுக்கொட்டை மரத்தாள் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

முசுக்கொட்டை மரத்தாள் பண்பாட்டு வீதியில், உய்கூர் இனத்தின் முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு துறையில், Tuo Hu Ti Ba Keவும் A Bu Du Re Mi Tiவும் மிகவும் புகழ் பெற்றவர்களாக இருக்கின்றனர். Tuo Hu Ti Ba Keவின் வீட்டின் தோட்டத்தில், வெள்ளை வண்ண ஆடை அணிந்த மெலிந்த முதியவர் ஒருவர் செய்தியாளரின் கவனத்தை ஈர்த்தார். அவரே, Tuo Hu Ti Ba Ke ஆவார். அவர் முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பத்தின் 10வது தலைமுறை வாரிசாக இருக்கிறார்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040