• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:உய்கூர் இனத்தின் முசுக்கொட்டை மரத் தாள் தயாரிப்பு நுட்பம்
  2013-05-02 14:56:13  cri எழுத்தின் அளவு:  A A A   

முதியவர் Tuo Hu Ti Ba Keக்கு வயது 100. அவர் இக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு 5 வயதானபோது, தாத்தாவிடமிருந்து முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பத்தைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். இதுவரை சில பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இம்முதியவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவ்விரு குழந்தைகளும் முசுக்கொட்டை மரத் தாள் தயாரிப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். முதியவர் Tuo Hu Ti Ba Keவின் பேரனும், பேத்தியும் முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பில் பெரும் அக்கறை செலுத்தி வருகின்றனர். அவர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகு, முசுக்கொட்டை மரத் தாள் தயாரிப்பில் அவர்களது தாத்தாவுக்கு உதவுவதுண்டு.

முதியவர் Tuo Hu Ti Ba Keவின் வீட்டின் தோட்டத்தில், முசுக்கொட்டை மரத்தாளின் வரலாறு பற்றிய சிறிய கண்காட்சி மேடை இருக்கிறது. இம்மேடையில் வெவ்வேறு அளவிலான முசுக்கொட்டை மரத்தாட்கள் காணப்படுகின்றன. நாற்கர வடிவத்திலான, சற்றே மஞ்சளான இத்தாட்களின் நார் மிக மெல்லியாகவும், இழை நயம் மென்மையாகவும் இருக்கின்றன. இத்தாட்கள் கெட்டியாக உள்ளன. இத்தாட்களிலிருந்து மெல்லிய நறுமணம் வீசுகிறது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040