• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:உய்கூர் இனத்தின் முசுக்கொட்டை மரத் தாள் தயாரிப்பு நுட்பம்
  2013-05-02 14:56:13  cri எழுத்தின் அளவு:  A A A   

முசுக்கொட்டை மரத்தாள், முசுக்கொட்டை மரப்பட்டையை மூலப் பொருளாக பயன்படுத்தி செய்யப்படும் ஒருவகை தாளாகும். இது மிக பழமைவாய்ந்த தாள் வகைகளில் ஒன்றாகும். இது ஹான் வம்சக்காலத்தில் தோன்றியது. ஹெதியன் பிரதேசத்தில், முசுக் கொட்டை மரத் தாட்களைப் பயன்படுத்துவதும், தயாரிக்கும் வரலாறும் மிகவும் நீண்டக்காலமுடையது. 1908ஆம் ஆண்டு, ஹெதியன் நகருக்கு வடக்கில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Ma Zha Ta Ge மலையில் உள்ள தாங் வம்சக்கால கோயில் ஒன்றில் கணக்கு புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்புத்தகத்தில் உள்ளூர் மக்கள் முசுக்கொட்டை மரத் தாட்களை வாங்கியது தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்தகவலின்படி, ஹெதியன் பிரதேசத்தில், முசுக்கொட்டை மரத்தாள் பயன்பாடு மற்றும் தயாரிப்பு, குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடையது. உள்ளூர் பிரதேசத்தில் உய்கூர் இனத்தின் ஒரு முக்கிய குடும்பக் கைவினை நுட்பம் இதுவாகும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040