• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:உய்கூர் இனத்தின் முசுக்கொட்டை மரத் தாள் தயாரிப்பு நுட்பம்
  2013-05-02 14:56:13  cri எழுத்தின் அளவு:  A A A   

அதற்குப் பின், முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு தொழில் நுட்பக் கையேற்றத்தின் முக்கியத்துவத்தை சீன அரசு புரிந்து கொள்ளத் துவங்கியது. 2008ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், Tuo Hu Ti Ba Ke, சீனப் பண்பாட்டு அமைச்சகத்தால், தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசு என நியமிக்கப்பட்டார்.

Tuo Hu Ti Ba Keவின் வீட்டின் இடது பக்கத்தில், 38 வயதான A Bu Du Re Mi Ti வாழ்கின்றார். அவர் இக்குடும்பத்தின் 11வது தலைமுறை வாரிசாக இருக்கிறார். அவரது குடும்பத்தில் 15 பேர் முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர் ஆவர். அவரது மகனும் மகளும் முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பில் ஆர்வம் கொண்டுள்ளனர். A Bu Du Re Mi Ti முசுக்கொட்டை மரத்தாள் பண்பாட்டு வீதி நிறுவப்பட்ட திட்டத்திலிருந்து நன்மை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் மறுசீரமைக்கப்பட்ட வீட்டில் அவர் குடிபெயர்ந்த பிறகு, அவரது வியாபாரம் சிறப்பாய் இருக்கிறது. முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பால் அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது 50 ஆயிரம் யுவானாகும் என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040