சீனாவின் யுன்னான் மாநிலத்தின் வட மேற்குப் பகுதியில், து லோங் சியாங் ஆறு ஓடுகிறது. சிங்காய்-திபெத் பீடபூமி தான், இந்த ஆறு தோன்றுகின்ற இடமாகும். இந்த ஆறு வடக்கிலிருந்து தெற்காக ஓடி, சீனாவிலிருந்து மியன்மாரின் எல்லைக்குள் பாய்கிறது. து லோங் சியாங் ஆற்றின் இரு பக்கத்திலும், உயர்ந்த மலைகள் அமைந்துள்ளன. து லோங் ஆற்றுப்பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரமுள்ள Dan Dang Li Ka மலை இருக்கிறது. இந்த ஆற்றுப்பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரமுள்ள Gao Li Gong மலை இருக்கிறது. செங்குத்தான மலைகளிலுள்ள பாதை மிகவும் கரடுமுரடானது. ஒரு பழமை வாய்ந்த தேசிய இனம் இங்கே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. து லோங் சியாங் ஆற்றின் பெயரால், இவ்வினம், து லோங் இனம் என அழைக்கப்படுகிறது.
<< 1 2 3 4 5 6 7 >>