• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து லோங் இன நாட்டுப்புறப்பாடல்கள்
  2013-05-21 08:53:37  cri எழுத்தின் அளவு:  A A A   

"து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசம், வெளியூரிலிருந்து துண்டிக்கப்படுகிறது" என்பது, மிகைப்படுத்தப்படும் கூற்று அல்ல. நூ சியாங் ஆற்று லி சு இனத் தன்னாட்சி சோவின் தலைநகர் லியு கு நகரம், து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசத்துக்குச் செல்லும் துவக்க புள்ளியாகும். உள்ளூர்வாசியின் அறிமுகத்தின்படி, து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசத்தில் நுழைய, ஆதிகால காடுகள், கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 400 மீட்டர் உயர்ந்த நுழைவாயில் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் முதல், அடுத்த ஆண்டின் மே திங்கள் வரை, மலைகள் பனியால் மூடப்படுவதால், து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசத்தில் நுழைய முடியாது. யாங் யுவான் ஜி கூறியதாவது:

"அந்த பிரதேசம், நெடுங்தொலைவில் உள்ளது. காலநிலை மிகவும் மோசமானது. மழை அதிகமாக பெய்கிறது. து லோங் இனத்தவர் மிகவும் தலைசிறந்தவராக இருக்கின்றனர். அவர்கள் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சீனாவின் 56 தேசிய இனங்களில், து லோங் இனத்தின் மக்கள் தொகை குறைவு. இருந்த போதிலும், தனிச்சிறப்பு வாய்ந்த செழிப்பான பாரம்பரியப் பண்பாட்டை இவ்வினத்தவர்கள் உருவாக்கியுள்ளனர். தனிச்சிறப்பு மிக்க இசை, நடனம், கவிதை இவர்களது பண்பாட்டில் இடம்பெறுகின்றன" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040