சீனா வா னொலியும் என் என் நட்பும்
  2013-06-19 17:54:06  cri எழுத்தின் அளவு:  A A A   

 

நான் கடந்த 15 வருடங்களாக கேட்டு வருகி ன்றேன் . முகம் தெரியாத எனக்கு முகவரி தந்தது சீனா வானொலி தமிழ் பிரிவு தான்

தமிழ் நாட்டில் நடைபெற்ற சீனா வானொலி கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து வருகின்றேன் . தமிழுக்கு அமுதென்று பேர் . அந்த அமிழ்தெனும் தமிழை சீனா வானொலி மூலமாக கேட்டு பயன் பெற்று வருகின்றேன். எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை, இந்த குறையை சீனா வானொலி தீர்த்து வைத்தது .இந்த சீனா வானொலி மூலமாக தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்ட நேயர் கள் உறவு பாலமாக தந்தது சீனா வானொலி.இதனால் சீனா வானொலி வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது.

தமிழ் பிரிவு தலைவி திருமதி கலைஅரசி அவர்களையும் ,திருமதி வாணி, திரு பான்டியன் ,திரு தமிழன்பன் ,திரு கிளிண்டன்ஸ் இவர்களது நட்பு கிடைத்தது. செம்மொழியான நம் தமிழ் மொழியை இங்கு சிறப்பாக தொகுத்து வழங்குவதில் தமிழுக்கும் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இருக்கிறது .

எனது அருமை மகள் திருமணதிற்கு தமிழ் பிரிவில் இருந்து வாழ்த்து வந்ததும்,,நேயர்கள் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து என் வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாற்றியதும் சீனா வானொலியே ....

வாழ்த்துக்களோடு வழங்கும் தமிழ் பாடல்கள் என்றும் பொக்கிசம்தன். இதற்க்கு மதிப்பு கிடையாது.

சீனா வானொலி நேயர்களை பொது அறிவு போட்டி வைத்து பரிசுகள் தருவதையும் பாரட்டுகிறேன் .தலை சிறந்த நேயராகவும் , சிறந்த நேயராகவும் என்னை தேர்வு செய்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொருணை சீனா வானொலி தலைமை மன்றத்தின் தலைவராக இருந்து , நான்கு கிளை நேயர் மன்றகளை உருவாக்கி உள்ளேன் ..

1.கோடிஸ்வரன் நகர் சீனா வானொலி கிளை மன்றம்.

2.புதுக்குடி சீனா வானொலி கிளை மன்றம்.

3.பாரதி வானொலி கிளை மன்றம்.

4, பாளை வானொலி கிளை மன்றம்.

மிக சிறப்பாக பட்டு வருகின்றது .

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய