• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சிச்சுவான் மாநிலத்தின் சின்ஷென் மூங்கில் பின்னல் கலை
  2013-08-20 08:55:43  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் சின்ஷென்னின் மூங்கில் பின்னல் கலை, உலகில் மனித குலத்தின் பொது பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

சின்ஷென்னில் சீன மூங்கில் பின்னல் கலைப் பொருட்காட்சியகம் அமைந்துள்ளது. மூங்கில் முளை வடிவிலான இந்த அருங்காட்சியகம், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அருங்காட்சியகத்தில், அதிகமான மூங்கிலால் பின்னல் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய வீட்டுப் பயன்பாட்டு மூங்கில் பொருட்களும், தலைசிறந்த மூங்கில் கலை படங்களும் இடம்பெறுகின்றன என்று அந்த அருங்காட்சியகத்தின் பணியாளர் Lan Xue Hong தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சின்ஷென், சீனாவின் மூங்கில் பின்னல் கலை கிராமமென அழைக்கப்படுகிறது. பழங்காலம் முதல் இக்காலம் வரையான கைவினை பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதலாவது காட்சி அரங்கில், கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுக்கு முன் பொது மக்களின் குடும்பங்களில் பொதுவாக பயன்படுத்தப்பட்ட மூங்கிலால் பின்னப்பட்ட அன்றாட வாழ்க்கை சாதனங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது காட்சி அரங்கில், சிங் வம்சத்தின் மூங்கில் பின்னல் கலைப் பொருட்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் உள்ளன" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040