• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சிச்சுவான் மாநிலத்தின் சின்ஷென் மூங்கில் பின்னல் கலை
  2013-08-20 08:55:43  cri எழுத்தின் அளவு:  A A A   

மூங்கில் பின்னல் மூலம் அதிக பணம் சம்பாதித்து, உள்ளூர் கிராமவாசிகள் மாடி வீடுகளில் குடிபெயரும் வசதியடைந்தனர். அவர்கள் சீருந்துகளை வாங்கி, அருமையான வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், சின்ஷென் மாவட்ட அரசு, மூங்கில் பின்னல் தொழிலை வளர்ப்பதில் உள்ளூர் விவசாயிகளுக்கு வழிகாட்டியுள்ளது. தற்போது 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் இம்மாவட்டத்தில் மூங்கில் பின்னல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நபர்வாரி ஆண்டு வருமானம், 30 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. அவர்கள் ஓரளவு வசதி படைத்த வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மூங்கில் பின்னல் தொழிலுள்ள ஒளிமயமான எதிர்காலத்தில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். Lan Xue Hong கூறியதாவது:

"சின்ஷென் மாவட்டத்தின் மூங்கில் பின்னல் கலை, நாட்டின் எல்லையைக் கடந்து, உலகில் காலடியெடுத்து வைத்துள்ளது. ஆனால் முக்கிய மூங்கில் பின்னல் கலைப் பொருட்கள் சீனாவில் தான் விற்கப்படுகின்றன. ஹெய்னான், ச்செ ஜியாங், யூன்னான், குவாங் சி உள்ளிட்ட இடங்களின் சந்தைகளில், மூங்கில் பின்னல் கலைப் பொருட்கள் காணப்படுகின்றன" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040