• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சிச்சுவான் மாநிலத்தின் சின்ஷென் மூங்கில் பின்னல் கலை
  2013-08-20 08:55:43  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த அருங்காட்சியகத்தின் நான்காவது மாடியில் உள்ள அறையில், பல தலைசிறந்த மூங்கில் கலைப் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 20க்கு அதிகமான படங்கள், மிகவும் அரியவை. மூங்கில் பின்னல் கைவினை கலைஞர் Chen Yun Huaவும், அவரது உதவியாளர்களும் இப்படங்களை மூங்கிலால் பின்னியுள்ளனர். இப்படங்களில் "அழகான பெண்" என்ற படம், Chen Yun Huaவுக்கு புகழ் பெற்று தந்துள்ளது. அவர் கூறியதாவது:

"'அழகான பெண்' என்ற படம், டாங் வம்சக்காலத்தின் புகழ்பெற்ற படமாகும். அப்படத்தின்படி, மூங்கில் கலை படத்தைப் பின்னி படைத்தோம். மூங்கில் இழைகளால் பின்னப்படும் மிக பெரிய படம் இதுவாகும். இப்படத்தில் உள்ள மூங்கில் இழைகள் மிகவும் சின்னஞ்சிறியவை. இப்படத்தின் நீளம், 3.8 மீட்டர் ஆகும். அதன் அகலம் 1 மீட்டர் ஆகும். நானும் இன்னும் இருவரும் சேர்ந்து ஒன்றரை ஆண்டில் இப்படத்தைப் பின்னினோம். இப்படம் கலைநயம் மிக்கது" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040