• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:வெய் சோவின் செதுக்கல் கலை
  2013-09-05 10:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் அன்குவெய் மாநிலத்தின் குவாங் ஷான் நகர், பசுமையான மலை, தூய்மையான ஆறு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. குவாங் ஷான் நகரிலும், புறநகரிலும் அமைதியான குறுந்தெருக்களும், பழமை வாய்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன. அங்கே பண்டைய குவெய் சோ குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இக்குடியிருப்புகள், "இயற்கைக் காட்சி பட கிராமங்கள்" என மக்களால் பாராட்டப்படுகின்றன. இக்குடியிருப்புகளில் நுழையும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. பழமை வாய்ந்த கட்டிடங்களின் முக்கிய பகுதிகளில், சிறந்த அழகான பண்டைய செதுக்கல் கலைப் படைப்புகளை கண்டு மகிழலாம். இந்த கலைப் படைப்புகள், செங்கல், கல் அல்லது மரத்தால் செதுக்கப்பட்டவையாகும். இவை தனிச்சிறப்பு வாய்ந்த நாட்டுப்புற நடையுடை பாவனைகளை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இவை, குவெய் சோவின் செதுக்கல் கலைப் பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.

சீன வரலாற்றில் குவெய் சோவில், குவாங் ஷான் நகரம், அன்குவெய் மாநிலத்தின் சுயன் (Xuan)ச்செங்கின் ஜி சி, சியாங் சி மாநிலத்தின் வூ யுவான் ஆகியவை இடம்பெறுகின்றன. குவெய் சோ, அன்குவெய் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்காலத்தில் குவெய் சோ சின் அன் என அழைக்கப்பட்டது. இவ்விடம் சுமார் 2200 ஆண்டுகால வரலாறுடையது. பண்டைக்காலம் தொட்டு, இது பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாக இருந்து வருகிறது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040