• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:வெய் சோவின் செதுக்கல் கலை
  2013-09-05 10:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   

குவெய் வணிகர்களை அடுத்து, குவெய் சோவின் முதல் தர கைவினை கலைஞர்கள், குவெய் சோவின் இன்னொரு மாதிரியாக இருந்தனர். குவெய் சோ செதுக்கல் கலைப்பொருட்கள், குவெய் சோவில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அது மட்டுமல்ல, பல்வேறு இடங்களுக்கிடை பண்பாட்டுப் பரிமாற்றத்துடன், குவெய் சோ செதுக்கல் கலை, குவெய் சோவுக்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கும் பரவி வந்துள்ளது.

குவெய் வணிகர்கள் செல்வச்செழிப்போடு விளங்கியது, இக்கலையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்தது. குவெய் சோவில், ஆயிரக்கணக்கான வீடுகள், மூதாதையர் மண்டபங்கள், வில்வளைவு அலங்கார வழிகள், தோட்டங்கள் ஆகியவை, குவெய் சோவின் செதுக்கல் கலையை வெளிப்படுத்தும் மேடையாக மாறின.

குவெய்சோவின் செதுக்கல் கலைப் பொருட்களின் செல்வாக்குடன், பண்டைய குவெய் சோ குடியிருப்புகள், உலகளவில் பிரபலமாகியுள்ளன. அதே வேளையில், குவெய்சோ குடியிருப்புகள், குவெய் சோவின் செதுக்கல் கலைப்பொருட்களைப் பரப்புரை செய்யும் மிக நல்ல வழியாகும் என்று குவாய் ஷான் நகரின் பண்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ஹூ சியான் பின் தெரிவித்தார். கடந்த ஆண்டு சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 80 லட்சத்து 13 ஆயிரம் பேர் குவாங் ஷான் நகரில் பயணம் மேற்கொண்டனர். அவர்களில், 63 விழுக்காட்டினர் குவெய் சோவின் செதுக்கல் கலையை தனிச்சிறப்பாக கொண்ட பண்டைய குடியிருப்பில் பயணம் மேற்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040