• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:வெய் சோவின் செதுக்கல் கலை
  2013-09-05 10:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்த செதுக்கல் கலை நுட்பத்தை இன்றும் வளர்ச்சியடைய செய்ய முடியும். செதுக்கல் கலை சாதனங்களை மேம்படுத்த முடியும் என்ற போதிலும், குவெய் சோவின் செதுக்கல் கலையில் இடம்பெறும் பண்பாட்டு அம்சங்களை போலியாக உருவாக்கி விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குவெய் சோ செதுக்கல் கலைப் பொருட்களின் கலை மதிப்பு உயர்வாக இருக்கிறது. ஆனால், பல பாராம்பரிய தொழில் திறன்களைப் போல், சமூக வளர்ச்சி மற்றும் காலத்தின் மாற்றத்துடன், குவெய் சோ செதுக்கல் கலையின் கையேற்றல் நீண்டகாலமாக தேக்க நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது.

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை சீனாவில் நடைமுறைக்கு வந்த பிறகு, குவாங் ஷான் நகரின் சுற்றுலாத் துறை வளர்ந்து வந்துள்ளது. குவெய் சோவின் செதுக்கல் கலை, புத்துயிர் பெற்றுள்ளது.

குவாங் ஷான் பிரதேசத்தின் சுற்றுலா தொழிலின் வளர்ச்சியுடன், குவெய் சோ பாணியுடைய கட்டிட செதுக்கல் கலையை பயணிகள் கண்டு இரசிக்கும் வேளையில், அங்குள்ள செதுக்கல் கலைப் பொருட்களை வாங்கி, தங்கள் வீடுகளிலும் அவற்றை பொருத்தி வைத்து இரசிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், குவெய் சோ செதுக்கல் கலைப்பொருட்களில், கட்டிடச் சாதனங்கள், வீட்டுச் சாதனங்கள் தான் பெரும்பாலானவை. அவற்றை பயணிகள் வீட்டுக்குக் கொண்டு செல்வது கடினம். அதனால் குவாங் ஷானுக்கு வரும் பயணிகள் வருத்தமடைகின்றனர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040