• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:வெய் சோவின் செதுக்கல் கலை
  2013-09-05 10:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   

குவெய் சோ பண்பாடு, உள்ளூர் பிரதேச தனிச்சிறப்பு வாய்ந்தது. குவெய் சோ பண்பாட்டின் செல்வாக்குடன், குவெய் சோ மக்கள் பண்பாட்டிலும் கல்வியிலும் கவனம் செலுத்துகின்றனர். இத்தகைய சூழலில் வளர்ந்த குவெய் சோ கைவினை கலைஞர்களின் செதுக்கல் கலைப்படைப்புகளில், ஆழ்ந்த பண்பாட்டு அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தவிர, குவெய் சோ செதுக்கல் கலைப்படைப்புகளில், அடிப்படையிலான கல்வியால் கற்றுக்கொள்ளும் நுட்ப செய்முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்பொருட்களில் உணர்வும் அனுபவங்களும் ஒழுக்க நெறிகளும் இணைந்து வெளிப்படுத்தப்படுகின்றன.

திரு சாவ் அன்குவெய் மாநிலத்தின் கைவினை நுண்கலை சங்கத்தின் துணைத் தலைவர் ஆவார். 2001ஆம் ஆண்டு அவர் 20 இலட்சம் யுவானை திரட்டி, குவாங் ஷான் நகரின் குவெய் சோ பாணி செதுக்கல் கலை ஆய்வகத்தை நிறுவினார். குவெய் சோ பாணி மர செதுக்கல் கலைப் பொருட்களின் ஆய்வு மற்றும் உற்பத்தியில் இந்த ஆய்வகம் ஈடுபடுகின்றது. குவெய் சோ செதுக்கல் கலைப்பொருட்கள், அன்றாட வாழ்க்கைப் பொருட்களாகவும், சுற்றுலா நினைவுப் பொருட்களாகவும் தற்போது தயாரிக்கப்படுகின்றன.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040