• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:வெய் சோவின் செதுக்கல் கலை
  2013-09-05 10:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   

குவெய் சோவின் செதுக்கல் கலை, குவெய் வணிகர்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதது என்று குவாங் ஷான் நகரின் குவெய் சோ பிரதேசத்தின் பரப்புரை வாரியத்தின் துணைத் தலைவர் ஹூ சிங்சுவான் தெரிவித்தார்.

மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தில், குவெய் வணிகர்கள் சீனாவின் பல்வேறு இடங்களின் வணிகத்தில் ஈடுபட்டனர். குவெய் வணிகர்கள் செல்வமடைந்த பிறகு, சொந்த ஊரில் உள்ள மூதாதையர் மண்டபம், வில்வளைவான அலங்கார வழி, தோட்டங்கள், பண்டையக் கல்வி கழகங்கள் ஆகிய கட்டிடங்களை கட்டியமைக்க அதிக பணம் செலவிட்டனர்.

குவெய் சோவின் செதுக்கல் கலை, குவெய் சோவின் முதல் தரக் கைவினை வல்லுநர்களிடமிருந்தும் பிரிக்கப்பட முடியாதது என்று ஹூ சிங்சுவான் விவரித்தார்.

பண்டைக்காலத்தில் குவெய் சோவில் கட்டிடத்தொழில் வளர்ந்து வந்தது. கைவினை கலைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இக்கைவினை கலைஞர்களின் தொழில் நுட்பம், தனிச்சிறப்பு வாய்ந்தது. இது குவெய் சோவின் பண்டைகால கட்டிடங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத தொழில் நுட்ப ஆதரவை வழங்கியது.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040