சீனாவின் அன்குவெய் மாநிலத்து துங் லிங் யுவான் ச்செங் கலைப் பொருள் தயாரிப்பு கூட்டு நிறுவனத்தில், "சிங் மிங் திருவிழா ஆற்றங்கரை இயற்கைக் காட்சி" புடைப்புச் சித்திரம் உள்ளது. இதுதான் சீனாவில் செம்பால் தயாரிக்கப்பட்ட முதலாவது புடைப்புச் சித்திரமாகும். இந்த புடைப்புச் சித்திரத்தின் நீளம், 11.4 மீட்டர், உயரம் 0.8 மீட்டர். இதை தயாரிக்க ஒன்றரை ஆண்டானது. இது, துங் லிங் நகரின் வெண்கல சிற்பத் தொழிலின் வளர்ச்சிப் பயன்களில் ஒன்றாகும். துங் லிங் யுவான் ச்செங் கலைப் பொருள் தயாரிப்பு கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் செங் யுவான் கூறியதாவது:
"பெரிய, நடுத்தர, சிறிய புடைப்புச் சித்திரங்களை இக்கூட்டு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த புடைப்புச் சித்திர தயாரிப்பு தொழில் செய்முறை மிகவும் சிக்கலானது. இதில் 300க்கு அதிகமான மனிதர்களின் உருவங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் அப்படியே மனிதரை போன்று இருக்கின்றன" என்றார் அவர்.
<< 1 2 3 4 5 6 7 >>