1992ஆம் ஆண்டுக்கு முன், துங் லிங் நகரில், வெண்கலக் கைவினைப் பொருட்களின் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் சில கைவினை நுண்கலைஞர்கள் ஆய்வு நடத்தியிருந்தனர். 1992ஆம் ஆண்டு சீன துங் லிங் வெண்கலப் பண்பாட்டுப் பொருட்காட்சி நடைபெற்றது. அப்போது, சீனாவின் முதலாவது வெண்கலக் கைவினைப் பொருட்களின் போட்டி நடைபெற்றது. சீனாவின் பத்துக்கு அதிகமான வெண்கல கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் அதில் கலந்து கொண்டன. இந்த தொழில் நிறுவனங்கள், வெண்கலக் கைவினை பொருள் தயாரிப்பு தொழில் நுட்பங்களை உட்புகுத்துவதற்கு துங் லிங் நகராட்சி உதவியதுடன், பத்துக்கு அதிகமான தொழில் நிறுவனங்கள், வெண்கல கைவினைப் பொருட்களின் ஆய்விலும் தயாரிப்பிலும் ஈடுபட தொடங்கின. தற்போது, துங் லிங் நகரின் வெண்கலக் கைவினைத் தொழில், அந்நகரின் தனிச்சிறப்பு வாய்ந்த தொழில்களில் ஒன்றாக மாறியுள்ளது.
துங் லிங் யுவான் ச்செங் கலைப் பொருள் தயாரிப்பு கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் செங் யுவான் சீன மத்திய நுண்கலை கல்லூரியில் கல்வி பயின்றவர். அவர் பட்டம் பெற்ற பிறகு, 4 ஆயிரம் யுவானை மட்டுமே கொண்டு, இக்கூட்டு நிறுவனத்தை நிறுவினார். தற்போது, அவரது மொத்த சொத்து, பத்து கோடி யுவானை எட்டியுள்ளது. அவர் துங் லிங் நகரின் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். அவர் இந்நகரின் வெண்கல சிற்பத் தொழிலின் வளர்ச்சிக்கு சான்றாக இருந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, நிகழ்ந்து வரும் தொழில் போட்டிகளில் வெண்கல சிற்பத் தொழில் நிறுவனங்களின் உயிராகவும் வளர்ச்சியைத் தூண்டும் சக்தியாகவும் புத்தாக்கம் மாறிள்ளது என்று அவர் தெரிவித்தார்.