கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் இறுதியில், சீனாவின் முதலாவது உட்புறம் வெற்றிடமாகவுள்ள வெளிப்புறம் நகருகின்ற புடைப்பு சிற்பத்தை, துங் லிங் யுவான் ச்செங் கலைப் பொருள் தயாரிப்பு கூட்டு நிறுவனம் தயாரித்தது. இச்சிற்பத்தின் உயரம் சுமார் 14 மீட்டர். அதன் எடை, 9 டன். இந்த பெரிய சித்திரம் பாதுகாப்பாக நகர்ந்து வரும் பொருட்டு, இக்கூட்டு நிறுவனம் பல தயாரிப்புத் திட்டங்களை வடிவமைத்து, இச்சித்திர தயாரிப்பு செய்முறையை மீண்டும் மீண்டும் ஆராய சீன மத்திய நுண்கலை கழகத்தின் நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தது. இக்கூட்டு நிறுவனத்தின் துணை மேலாளர் ச்செங் ச்சு ஹெங் கூறியதாவது:
"நகரும் புடைப்புச் சித்திரத்தைத் தயாரிப்பது தொடர்பாக, சீனாவில் முன்னதாக எந்த மாதிரியும் இல்லை. அதனால் இந்த நகரும் புடைப்புச் சித்திரத்தைத் தயாரித்து, பொருத்துவதில் சில இன்னல்களை சந்தித்தோம். பெரும் முயற்சிகளுடன், நகரும் புடைப்பு சித்திர தயாரிப்பு வெற்றியடைந்தது" என்றார் அவர்.