தற்போது, யுவான் ச்செங் கூட்டு நிறுவனம், மூத்த கைவினை கலைஞர்களின் படைப்புகளை தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அப்படைப்புகளின் தயாரிப்பு முறையை ஆராய்வதன் மூலம், செல்வாக்கு வாய்ந்த மேலதிக வெண்கல புடைப்புச் சித்திரப் படைப்புகளை இது தயாரிக்கும்.
யுவான் ச்செங் கூட்டு நிறுவனத்தைப் போல், துங் லிங் நகரின் பல பெரிய வெண்கல சித்திரத் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள், வெண்கலப் பண்பாட்டுத் தொழில் திட்டப்பணியை உருவாக்கி, வடிவமைப்பு மற்றும் படைப்பாற்றல் மிக்க திறனாளிகளை பணிக்கு அமர்த்தி வருகின்றன. வெண்கல சிற்பத் தொழிலையும், பண்பாட்டுப் படைப்புகளையும் ஒன்றிணைப்பதன் மூலம், வெண்கல சித்திரப் படைப்புகளின் "கலை அழகையும்", "அதனை உருவாக்கும் தனிமங்களையும்" அதிகரிக்க வேண்டும் என்று இக்கூட்டு நிறுவனம் விரும்புகிறது. சின் ச்சியு திங் வெண்கலப் பண்பாட்டுத் தொழில் கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ச்செங் துங் பிங் கூறியதாவது:
"தற்போது, பன்னாட்டு வெண்கலப் பண்பாட்டு புத்தாக்கத் தொழில் பண்ணையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். கலைஞர்களும், வடிவமைப்பாளர்களும் இத்தொழில் பண்ணையில் தங்கியிருந்து, படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார் அவர்.