கடந்த பல ஆண்டுகளில், வெண்கலக் கல்வியியல் கூட்டத்தை ஏற்பாடு செய்வது, வெண்கலப் பண்பாட்டுப் பொருட்காட்சியையும் பன்னாட்டு வெண்கல சித்திரப் போட்டியையும் நடத்துவது, துங் லிங் நகரின் அடையாளங்கள் கொண்ட வெண்கல சித்திரங்களை உருவாக்குவது ஆகியவற்றின் மூலம், பழமை வாய்ந்த வெண்கல நகரான துங் லிங், நாளுக்கு நாள் உலகச் செல்வாக்கை வென்று வருகிறது. பெய்சிங் சித்திரப் பணியகத்தின் தலைவர் யூ குவா யூன் கூறியதாவது:
"நகர ரீதியால் பார்த்தால் சித்திரத் துறையில், துங் லிங் நகர் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளின் கலைஞர்கள், துங் லிங்கிற்கு வந்த பிறகு இச்சித்திரங்களை வெகுவாக பாராட்டியுள்ளனர். துங் லிங்கின் வெண்கல சித்திரப் படைப்புகள் உலகளவில் வரவேற்கப்படுவதற்கு மேலும் பரந்துபட்ட எதிர்காலம் உள்ளது" என்றார் அவர்.
நேயர்களே, "துங் லிங் நகரின் வெண்கலக் கைவினை தொழில் வளர்ச்சி" பற்றிக் கேட்டீர்கள். இந்நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களை எதிர்பார்கின்றோம். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.