தற்போது, அதிகமான புகழ்பெற்ற கலைஞர்கள், துங் லிங் கைவினைப் பொருட்களை உருவாக்குவதில் ஈடுபடுகின்றனர். துங் லிங் வெண்கல கைவினைப் பொருட்களின் மூலப் பொருட்கள் நாளுக்கு நாள் புத்தாக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, வெண்கல சித்திரப் படைப்புகளில் கல், துருபிடிக்காத எஃகு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2010ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் நடைபெற்ற சீனாவின் முதலாவது பன்னாட்டு வெண்கல சித்திர கலைக் கண்காட்சியை அடுத்து, 2012ஆம் ஆண்டு நவம்பரில், சீனாவின் இரண்டாவது பன்னாட்டு வெண்கல சித்திரக் கலைக் கண்காட்சி துவங்கியது. வெண்கலப் பண்பாட்டை உருவாக்குவது என்ற தலைப்பில் இக்கலைக் கண்காட்சியில், உலகளவிலுள்ள சுமார் 600 வெண்கல சித்திரப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இக்கண்காட்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் சிற்பி கொன்சாலஸ் கூறியதாவது:
"சித்திரப் பூங்கா மிகவும் அழகானது. இப்பூங்காவில் சித்திரங்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாய் ஒன்றிணைந்துள்ளன. அனைத்தும் மிகவும் அழகானவை" என்றார் அவர்.