வெண்கல புடைப்புச் சித்திரத்தை நகரச்செய்வது, உண்மையிலேயே சிறந்த படைப்பாற்றலாகும். கடந்த பல ஆண்டுகளில் எழுந்த புதிய சிந்தனைகள், யுவான் ச்செங் கூட்டு நிறுவனத்துக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த வளர்ச்சிப் பாதையை திறந்து வைத்துள்ளன. இக்கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ச்செங் யுவான் கூறியதாவது:
"மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததுடன், கலையழகு பற்றிய அவர்களின் உணர்வும் மேம்பட்டுள்ளது. இது எங்கள் கூட்டு நிறுவனத்துக்கு விடுக்கப்பட்ட அறைகூவல். எமது பணியில் புத்தாக்கம் வேண்டும் என்பதுதான், அந்த அறைகூவலாகும்" என்றார் அவர்.