• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மனித மூளைகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் – பகுதி I
  2013-09-16 15:35:18  cri எழுத்தின் அளவு:  A A A   

ராஜேஷ் ராவ் கணினித் திரையை பார்த்து எளிய கணினி விளையாட்டு ஒன்றை கையை பயன்படுத்தாமல் மனதளவில் விளையாட தொடங்கினார். அந்த விளையாட்டில், எண்ணெய் மற்றும் பொருட்கள் வழங்கும் விமானங்களை இலக்கு வைத்து தாக்கப்படும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த வேண்டும். மனதளவில் விளையாடிய ராஜேஷ் ராவ், இலக்கு ஒன்றை தாக்குவதற்காக, அவரது வலது கையை நகர்த்தி, கணினியின் சுட்டியால் கணினித் திரையில் "சுடு" என்றிருப்பதை அழுத்த எண்ணினார். ராஜேஷ் ராவ் இவ்வாறு எண்ணினாரே தவிர, செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது, ஒலி கேட்காமலிருக்க காதை அடைத்துக் கொண்டும், கணினித் திரையை பார்க்காமலும் ஆன்டிரியா ஸ்டோகோ அவருடைய ஆய்வகத்தில் அமர்ந்திருந்தார். சுட்டு அழிக்க வேண்டிய இலக்கை சுடுவதற்கு கணினி சுட்டியை நகர்த்த ராஜேஷ் ராவ் எண்ணிய ஏறக்குறைய அதேவேளை, ஆன்டிரியா ஸ்டோகோ, அவருக்கு முன்னாலிருந்த கணினியின் தட்டச்சுப் பலகையில், சொற்களுக்கு இடைவெளி விட உதவும் பொத்தானை வலது கை ஆள்காட்டி விரலால், தொட்டு, சுட வேண்டிய இலக்கை சுடுவதுபோல் செயல்பட்டார்.

இலக்கை சுடுவதற்கு ராஜேஷ் ராவ் எண்ணியபோது, அவரது மூளையில் உருவான மின் செயல்பாடு, அதனை பதிவுச் செய்ய இணைக்கப்பட்டிருந்த கருவியில் பதிந்தது. பின்னர், இணைய வசதி வழியாக ஆன்டிரியா ஸ்டோகோ அணிந்திருந்த காந்த அலையால் தூண்டுதல் வழங்கும் கம்பிச்சுருள் மூலம் ஸ்டேகோவின் மூளைக்கு சமிக்கை அனுப்பியது. அந்த சமிக்கையை வாசித்து, புரிந்துக் கொண்ட ஆன்டிரியா ஸ்டோகோவின் மூளை இலக்கை சுடும் செயல்பாட்டை நிறைவேற்ற கைக்கு ஆணையிட, வலது கை நகர்ந்து கணினிச் சுட்டியை தொட்டுள்ளது.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040