• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான்கு,நேயர்களின் கேள்விகள்
  2014-03-06 15:58:42  cri எழுத்தின் அளவு:  A A A   

6. நவீன யுகத்தில், துரித உணவுகள் மிகவும் புகழ்பெற்றுவிட்டன. ஆனால், இந்த துரித உணவுகளால் பொதுமக்களின் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதை அண்மைக்கால ஆய்வகள் மெய்ப்பித்துள்ளன. அந்நிலையில், பாதுகாப்பான உணவுக்கான மூலப்பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும், இயற்கை உணவுகளை மேம்படுத்தவும் சீனா முயற்சிகள் மேற்கொள்ளுமா?

7. உலக அமைதியைப் பேணிக் காக்க, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில், சீனாவுக்கு எப்பொழுதும் கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக, ஈரான் அணு ஆற்றல் பிரச்னை, கொரிய தீபகற்பப் பிரச்னை, சிரியப் பிரச்னை, தென் சூடான் பிரச்னை போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அண்மையில், உக்ரைன் பிரச்னையும் புதிதாக சேர்ந்து கொண்டது. ஆனால், ஐ.நா.சபையை எடுப்பார் கைப்பிள்ளையாகக் கருதும் அமெரிக்கா, பிரச்னைகளைப் பயன்படுத்தி அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது. படிப்படியாக பொருளாதார வல்லரசாகவும் உருவாகி வரும் சீனா, அமெரிக்காவின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி, உலக விவகாரங்களில் உரிய பங்காற்றுமா?

8. வான் பாதுகாப்பு அடையாள மண்டலம், தென் சீனக் கடல் மற்றும் தியாவ் யு தீவு போன்ற, சீனாவுக்கு உரிமையான பகுதிகள் மீது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜப்பான் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அதன் மூலம், 2.10.1971 அன்று இரு நாடுகளிடையே ஏற்பட்ட மூன்று அம்ச உடன்படிக்கையை ஜப்பான் மீறிவிட்டது. மேலும், அதன் பாட நூல்களிலும் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அன்றி, இவ்வாண்டின் தொடக்கத்தில், சர்ச்சைக்குரிய யெசுகுனி கல்லறையில், ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்ஜோ அபெய் அஞ்சலி செலுத்தியதன் மூலம் சீனர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளார். ஜப்பானின் அசட்டுத் துணிச்சலை தடுக்க சீனா என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது?

9. 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சீனாவில் முதியோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2050-ஆம் ஆண்டில், சீனாவில் முதியோரின் எண்ணிக்கை 342 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அவர்களின் தேவைகளை நிறைவு செய்வது, அரசுக்கு சவாலான பணியாக இருக்கும். முதியோர் ஓய்வூதியம், முதியோர் மருத்துவக் காப்புறுதித் திட்டம் போன்றவற்றிற்கு அதிகத் தொகை செலவிட நேரிடும். ஒரு குடும்பம்-ஒரு குழந்தை என்ற கொள்கையின் காரணமாக ஏற்பட்ட இப்பிரச்னையை எதிர்காலத்தில் சீனா எவ்வாறு சமாளிக்கும்?

10. 2020-ஆம் ஆண்டில் ஓரளவு வசதி படைத்த சமூகத்தை உருவாக்குவது என்ற இலக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி, சீனா பயணிப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

11. ஏழை-பணக்காரர் பொருளாதார இடைவெளிப் பிரச்னை, பிற நாடுகளில் உள்ளதைப் போல சீனாவிலும் காணப்படுகிறது. அரசின் பார்வையில் அனைவரும் சமம் என்ற நிலையில், இப்பிரச்னையை சீனா எவ்வாறு தீர்க்கும்?

12. சீனாவின் நகரமயமாக்கம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டினர், 2035-ஆம் ஆண்டில் நகரங்களில்தான் வசிப்பார்கள் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வாறு நேர்ந்தால், நகரக் கட்டமைப்பில் அறைகூவல்கள் ஏற்படும். கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வதைத் தவிர்க்கவும், அவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், தற்போதைய திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படுமா?


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040